ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

பண்டிகை காலத்தையொட்டி, ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையிலான சிறப்பு சேமிப்புச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

பண்டிகை காலம் நெருங்கி இருப்பதையடுத்து, புதிய கார் மற்றும் பைக்குகள் வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டத் துவங்கி இருக்கின்றனர். மேலும், கொரோனாவால் தனிநபர் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

இதனால், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் கார் நிறுவனங்கள் பல சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.2.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

ஹோண்டா அமேஸ், புதிய சிட்டி, டபிள்யூஆர்வி, ஜாஸ் மற்றும் சிவிக் ஆகிய கார் மாடல்களுக்கு சிறப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு கார் மாடலுக்கும் எவ்வளவு சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது என்ற விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.47,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.37,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. பழைய காரை கொடுத்து புதிய அமேஸ் காரை வாங்க விரும்புவோருக்கு ரூ.15,000 கூடுதல் மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

மேலும், அமேஸ் பெட்ரோல் மாடலுக்கு ரூ.20,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.10,000 வரையிலும் நேரடி தள்ளுபடியும் பெற இயலும். இந்த காரின் நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு ரூ.12,000 மதிப்புடைய வாரண்டி சலுகையையும் பெறலாம்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.40,000 வரையில் சேமிப்புச் சலுகைகள பெற முடியும். இதில், நேரடி தள்ளுபடியாக ரூ.25,000 வரையிலும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் வழங்கப்படும்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

புதிய ஹோண்டா சிட்டி

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.30,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த கார் ரூ.10.89 லட்சம் முதல் ரூ.12.39 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாக பெற முடியும். இந்த கார் ரூ.8.49 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

 ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகள்!

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிவிக் காருக்கு ரூ.2.50 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. சிவிக் பெட்ரோல் மாடலுக்குரூ.1 லட்சம் வரை நேரடி தள்ளுபடியாக பெற வாய்ப்பும் இருக்கிறது. வரும் 30ந் தேதி வரை இந்த சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

English summary
Honda Cars India is offering attractive benefits during the ongoing festive season in India. The latest offers include cash discounts, exchange benefits and other special packages available on select models in the brand's line-up.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X