ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... எகிறும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு!

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் அசரடிக்கின்றன. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த காரின் முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வாக ஹோண்டா சிட்டி கார் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஐந்தாம் தலைமுறை மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் மிகவும் சிறப்பான மாடலாக வந்தது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

இந்த நிலையில், இந்த ஐந்தாம் தலைமுறை சிட்டி காரின் ஹைப்ரிட் மாடலை கடந்த ஆகஸ்ட் மாதம் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது. இந்த மாடல் முதலாவாதாக தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

தாய்லாந்து நாட்டில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா சிட்டி ஆர்எஸ் என்ற உயர்வகை மாடலில்தான் இந்த புதிய ஹைப்ரிட் தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஆர்எஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

ஆனால், ஆர்எஸ் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 98 பிஎஸ் பவரையும், 127 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த ஹைப்ரிட் மாடலில் பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து செயல்படுவதற்காக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும் மற்றொன்று சக்கரங்ளுக்கு சக்தியை செலுத்தும் வகையிலும் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் 108 பிஎஸ் பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் மாடலானது கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 27.78 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

இதனால், இந்த கார் மீது இந்தியர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிட்டி ஹைப்ரிட் மாடலானது தாய்லாந்து நாட்டில் 8.39 லட்சம் பட் (இந்திய மதிப்பில் ரூ.20.43 லட்சம்) விலை மதிப்பில் வந்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது ரூ.17 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம்.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

புதிய ஹோண்டா சிட்டி ஆர்எஸ் மாடலில் எஞ்சின் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் தவிர்த்து, ஏராளமான சிறப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன. ஹனிகோம்ப் எனப்படும் தேன்கூடு வடிவிலான முகப்பு க்ரில் அமைப்பு, கவர்ச்சியான பம்பர், பூட் லிட் ஸ்பாய்லர், டியூவல் டோன் 16 அங்குல அலாய் வீல்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலின் அசரடிக்கும் மைலேஜ்... இப்போதைக்கு இதுதான் நமக்கு தேவை!

இந்த காரில் ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், லேன் வாட்ச் கேமரா, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோ ஹை பீம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Honda has launched City hybrid model in Thailand and it is expected to come to Indian shores sometime next year.
Story first published: Saturday, November 28, 2020, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X