இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

இந்தியாவின் வேகமான சிவிக் காராக ஹோண்டா சிவிக் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை சிவிக் காரை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் செடான் ரக காரான சிவிக், கார் ஆர்வலர்களிடையே பிரபலமான மாடலாகும். அதேநேரம் மாடிஃபை உலகிலும் இந்த ஹோண்டா செடான் கார் பிரபலமான கார்களுள் ஒன்றாக உள்ளது.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

இந்த வகையில் மாடிஃபை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிவிக் கார்களை இதற்கு முன்பு சில முறை பார்த்திருப்போம். இதற்கு மற்றொரு உதாரணமாக, தற்போது ரேஸ் கான்செப்ட்ஸ் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனத்தால் ஹோண்டா சிவிக் கார் ஒன்று இந்தியாவின் ஆற்றல்மிக்க மற்றும் வேகமான சிவிக் காராக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ ரேஸ் கான்செப்ட்ஸ் யுடியூப் சேனல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மற்ற மாடிஃபை சிவிக் கார்களை போல் இந்த காரிலும் வெளிப்புறத்தில் அதிகளவில் மாடிஃபிகேஷன் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி காரை சுற்றிலும் பாடி கிட், ஸ்போர்டியான வடிவத்தில் அலாய் சக்கரங்கள், ஸ்பாய்லர் மற்றும் கவர்ச்சிக்கரமான பெயிண்ட் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

மொத்த காரும் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கருப்பு நிறம் காரை சுற்றி உள்ள க்ரோம் பாகங்களுக்கும் தொடரப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்கள் சந்தைக்கு பிறகானதாக வழங்கப்பட்டுள்ளன. காரின் முன் மற்றும் பின் புறங்கள் விரைவான வெளியீட்டு பம்பர் க்ளிப்புகளை கொண்டுள்ளன.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

பொனெட்டில் சிறப்பான காற்று ஏற்பானிற்காக ஸ்கூப் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எல்லாம் இந்த மாடிஃபை காரின் சிறப்பம்சங்களாக குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் இந்த காரின் ஹைலைட்டே அதன் அடிப்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் தான்.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

சிவிக் காருக்கு வழக்கமாக தொழிற்சாலையில் பொருத்தப்படும் என்ஜின் அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. கூடுதலாக, முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட இண்டர்கூலர், தனிப்பயன்பாட்டு பிளம்பிங் மற்றும் வெளிப்புற வேஸ்ட்கேட்டை கொண்ட காரெட் ஜி-சீரிஸ் டர்போசார்ஜர் உடன் இதன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல்மிக்க என்ஜினை ரேஸ் கான்செப்ட்ஸ் நிறுவனமே வடிவமைத்துள்ளது.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

இவற்றுடன் குளிர்ந்த காற்று ஏற்பானையும் அவர்கள் இந்த காரில் பொருத்தியுள்ளனர். ஹை-ஃப்லோ ஃப்யூல் இன்ஜெக்டர்கள், ஸ்டேஜ் 4 க்ளட்ச், ரேஸ் கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய காயில்ஓவர், துளையிடப்பட்ட மற்றும் வெண்டட் ப்ரேக் ரோட்டார்ஸ் மற்றும் செயல்திறன் ப்ரேக் லைன் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற மாற்றங்களாகும்.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

இவற்றுடன் மிகவும் இனிமையான சத்தத்தை வெளிப்படுத்தும் ரேஸ் கான்செப்ட்டின் வளையாத இரும்பு எக்ஸாஸ்ட் அமைப்பையும் இந்த சிவிக் கார் பெற்றுள்ளது. இவை எல்லாம் சேர்த்துதான் இந்த மாடிஃபை சிவிக் காரை அதிகப்பட்சமாக சுமார் 450 பிஎச்பி-ல் இயங்க வைக்கின்றன. 450 பிஎச்பி என்பது க்ரான்க்கின் போது வெளியிடப்படும் ஆற்றலாகும்.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

சக்கரங்களின்போது இதன் என்ஜின் அமைப்பு 402 பிஎச்பி-ஐ வெளிப்படுத்தும். ஆனால் எப்படியிருந்தாலும் இந்த ஆற்றல் அளவு ஸ்டாக் வெர்சனை காட்டிலும் பல மடங்கு அதிகமே. ஸ்டாக் ஹோண்டா சிவிக் காரில் 1.8 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 130 பிஎச்பி மற்றும் 171 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இதுதான் இந்தியாவின் வேகமான ஹோண்டா சிவிக் காராம்...! என்ஜினின் அதிகப்பட்ச ஆற்றல் 450 பிஎச்பி

இதனால் இந்த மாடிஃபை சிவிக் காரை மற்ற ஸ்போர்ட்ஸ் கார்களுடன் தாரளமாக போட்டியிட வைக்கலாம் என ரேஸ் கான்செப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அட்டகாசமான தோற்றத்தையும் இந்த கார் கொண்டுள்ளதால் கார் பிரியர்களுக்கு இதற்குமேல் வேறென்ன வேண்டும்.

Most Read Articles
English summary
India’s FASTEST Honda Civic makes 450 Bhp [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X