குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

ஹோண்டா நிறுவனத்தின் சிஆர்-வி எஸ்யூவி காரின் புதிய ஆரம்ப நிலை வேரியண்ட் குறித்து வெளியான வதந்திக்கு ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

பண்டிகை காலம் வருவதால் காரின் தேவையை அதிகரிக்க அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் கடுமையாக பணியாற்றி வருகின்றன. இதனால் புதிய புதிய எடிசன் கார்களின் அறிமுகத்தை வரிசையாக பார்த்து வருகிறோம். இனியும் பார்ப்போம்.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இந்த வகையில் ஹோண்டா நிறுவனமும் சில தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் அதன் இந்திய எஸ்யூவி கார்களுள் ஒன்றான சிஆர்-வி மாடலுக்கு புதிய ஆரம்ப நிலை வேரியண்ட்டை வழங்கவுள்ளதாக இணையத்தில் வதந்திகள் வெளியாகின.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இதற்கு பதிலளித்துள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், சிஆர்-வி இன் புதிய வேரியண்ட் எதுவும் வர போவதில்லை என்று கூறியுள்ளது. இந்நிறுவனம் தற்சமயம் சிஆர்-வி காரை ஒரே ஒரு இரு-சக்கர-ட்ரைவ் பெட்ரோல் சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.28.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகமான இந்த ப்ரீமியம் எஸ்யூவி கார் அந்த வருட அக்டோபர் மாதத்திலேயே பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு வந்துவிட்டது.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இதன் டீசல் என்ஜின் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர ட்ரைவ் என்ற உள்ளமைவுகளுடன் வழங்கப்பட்டது. அதன்பின் இந்த 2020ஆம் வருட துவக்கத்தில் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் டீசல் என்ஜின் தேர்வை சிஆர்-வி எஸ்யூவி காரில் இருந்து ஹோண்டா நிறுவனம் நீக்கியது.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இதனால் ஒரே ஒரு 2.0 லிட்டர் ஐ-விடிஇசி 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே இந்த கார் தற்சமயம் கிடைக்கிறது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 154 பிஎச்பி மற்றும் 189 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. தற்சமயம் விற்பனையில் இருப்பது ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிஆர்-வி ஆகும்.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

இதன் விற்பனை பெரிய அளவில் நம் நாட்டில் இல்லை. இதற்கு விலை முக்கிய காரணமாக சொல்லலாம். இதனால்தான் குறைவான விலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் புதியதாக வரும் வாரங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

குறைவான விலையில் அறிமுகமாகுகிறதா சிஆர்-வி எஸ்யூவி கார்..? ஹோண்டா நிறுவனம் பதில்...

ஆனால் அதற்குள்ளாக தற்போது ஹோண்டா நிறுவனம் இந்த செய்தியினை மறுத்துவிட்டது. விலை குறைவான வேரியண்ட் வந்திருந்தால் ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிது கவனத்தை பெற்றிருக்கலாம் என்பது எனது கருத்து.

Most Read Articles

English summary
Honda clarified no new variant for its CR-V SUV.
Story first published: Friday, October 16, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X