ஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...

இந்த புதிய பைக்கை பற்றிய தகவல்களை ஹோண்டா நிறுவனம் மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இதன் முதல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய மோட்டார்சைக்கிளின் பெயர் குறித்த குறிப்புகள் வெளிகாட்டப்பட்டுள்ளன.

இதன்படி இந்த புதிய ஹோண்டா க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஹைனெஸ் (உயர்ந்த தன்மை) என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹோண்டா பைக்கிற்கு ராயல் என்பீல்டின் புதிய தயாரிப்பான மீட்டியோர் 350 நேரடி போட்டியாக விளங்கும்.

ஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017ல் ரீபல் டிசைனிற்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றிருந்தது. இதனால் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனையில் உள்ள ரீபல் 300 கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு இருக்குமா அல்லது முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் எப்படியிருந்தாலும் இந்த புதிய பைக் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். ரீபல் 300-ஐ முதன்மையாக அடிப்படையாக கொண்டு இந்த புதிய க்ரூஸர் பைக் தயாரிக்கப்பட்டு இருந்தால் அதே ரெட்ரோ-ஸ்டைல் டிசைன் இதிலும் தொடர்ந்திருக்கும்.

குறைவான பாடி பேனல்களுடன் வழக்கமான வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ கிளாசிக் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வட்ட வடிவிலான எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் செவ்வக வடிவிலான எல்இடி டெயில்லைட்களை பைக்கில் எதிர்பார்க்கலாம்.

அதேபோல் பைக்கின் முன்பக்கம் சிறியதாகவும், பின்பக்கத்தில் பாப் ஃபெண்டர்களும் வழங்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் பைக்கில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சமாக கண்ணீர்த்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் விளங்கும். வசதிகளை பொறுத்தவரையில் முழு-எல்இடி விளக்கு அமைப்பு மற்றும் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.

சஸ்பென்ஷனிற்கு 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்திலும், இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறத்திலும் வழங்கப்பட்டிருக்கலாம். ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகளுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் & ட்யூல்-சேனல் ஏபிஎஸ் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஹோண்டா பைக் விற்பனை செய்யப்படலாம்.

ஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...

இயக்க ஆற்றலிற்கு ரீபெல் 300-ல் உள்ள 286சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு டிஒஎச்சி என்ஜின் தான் இந்த புதிய க்ரூஸர் பைக்கிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 30.4 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்-ல் 27.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ட்ரான்ஸ்மிஷன் உதவிக்கு ஸ்லிப்பர் க்ளட்ச்சும் இந்த பைக்கில் கொடுக்கப்படலாம். அதேபோல் 13-பிரிவு டயர்களுடன் சிறிய அளவில் 16 இன்ச்சில் சக்கரங்களை இந்த பைக் பெறலாம். ஹோண்டா மோட்டார்சைக்கிள் பிராண்ட், இந்த புதிய ஹைனெஸ் மோட்டார்சைக்கிளை அதன் ப்ரீமியம் டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹோண்டாவின் ப்ரீமியம் டீலர்ஷிப்கள் நாடு முழுவதும் 75 நகரங்களில் விரிவு செய்யப்படவுள்ளன. புதிய ஹைனெஸ் பைக்கின் விலை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சத்திற்கு உள்ளாக நிர்ணயிக்கப்படலாம். இது ராயல் என்பீல்டு மீட்டியோரை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் அதிகமாக இருக்கும்.

Most Read Articles

English summary
Honda Highness Cruiser Arriving Soon in India – First Teaser Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X