இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

ஹோண்டா மின்சார கார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

உலக நாடுகள் அனைத்தும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றன. எனவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கு வழங்கி வரும் கவனத்தை லேசாக தளர்த்திவிட்டு, மின் வாகன உற்பத்தியில் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா, ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய நிறுவனங்கள் அதன் மின்சார கார்களை ஏற்கனவே களமிறக்கிவிட்டன. மேலும், இந்த வரிசையை விரிவாக்கம் செய்யும் பணியிலும் அவை ஈடுபட்டு வருகின்றன. தற்போது வரை இந்த நிறுவனங்களின் மின்சார கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின் வாகனங்களாக இருக்கின்றன.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் விரைவில் அதன் மின்சார காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அக்கார் இந்தியாவில் களமிறக்கப்படுமா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதேசமயம், மேற்கூறிய நிறுவனங்கள் அனைத்தும் அதன் மின்சார தயாரிப்பை எஸ்யூவி மாடலிலேயே அறிமுகப்படுத்தி வரும் வேலையில், ஹோண்டா நிறுவனம் மட்டும் சிறிய ஹேட்ச்பேக் மாடலில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

ஹோண்டாவின் இந்த நடவடிக்கை வாகன சந்தையில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. அனைவரையும் கவரும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்த சிறிய மின்சார காரை களமிறக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஹோண்டா இ என பெயரிடப்பட்டிருக்கும் அந்த மின்சார காரை அந்நிறுவனம் அண்மையில் கான்செப்ட் மாடலாக ஐரோப்பியா நாட்டில் அறிமுகம் செய்தது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

இக்காரையே தற்போது தனது முதல் மின்சார காராக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்கார் ஒரு முழுமையான சார்ஜில் 570 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என கூறப்படுகின்றது. அதேசமயம், ஒரு புறம் இக்கார் 280கிமீ வரை மட்டுமே ஒரு முழுமையான சார்ஜில் பயணிக்கும் என கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

அதேசமயம், தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான மின்சார கார்கள் அதிகபட்சமாக 400 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கும் காராக இருக்கின்றன. இந்த நிலையில் ஹோண்டா இ மிகக் குறைந்த ரேஞ்ஜில் களமிறங்குமானால் அது மிகப் பெரிய பின் விளைவைச் சந்திக்க நேரிடும். அதேசமயம், அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்பதற்காகவே பேட்டரி பேக்கில் ஹோண்டா கை வைத்திருப்பதாக தெரிகின்றது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

அதிக திறன் கொண்ட பேட்டரி பேக்குடைய மின்சார கார்கள் பிரிமியம் கார்களுக்கு இணையான விலையைப் பெற்றுவிடுகின்றன. இதனால் அக்காரை நுகர்வதில் தொய்வு ஏற்படுகின்றது. எனவேதான் ஹோண்டா நிறுவனம், சிறிய உருவ காருக்கு குறைந்த ரேஞ்ஜ் அம்சத்தை வழங்க இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

ஹோண்டா இ கார் குறைந்த பேட்டரி பேக்கினைக் கொண்டிருந்தாலும் அதன் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பிரம்மிப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் இருக்கின்றது. இவ்வாறு நாம் கூறுவதற்கு ஹோண்டா இ காரின் ரெட்ரோ ஸ்டைலே முக்கிய காரணமாக இருக்கின்றது. இது 1960ம் ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட ஹோண்டா கிளாசிக் என்360 மற்றும் என்600 ஆகியவற்றைப் போன்று காட்சியளிக்கிறது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

இக்காரே விரைவில் விற்பனைக்கு விரவிருக்கின்றது. இதற்கான விலையாக 33,000 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரெனால்ட் சோயி இசட்இ 50 மாடலைக் காட்டிலும் அதிக விலையாகும். ரெனால்ட் மின்சார கார் ஹோண்டா இ காரைக் காட்டிலும் அதிக மைலேஜ் வழங்கக் கூடியதாக உள்ளது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

இது உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும், அதிக ரேஞ்ஜ் வழங்கும் ரெனால்ட் சோயி மின்சார காரைக் காட்டிலும் ஹோண்டாவின் விலை ஏன் அதிகமாக இருக்கின்றது என்ற கேள்வி எழும்பக்கூடும். ஹோண்டா இ மின்சார காரில் ரெனால்ட் சோயியைக் காட்டிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கபட உள்ளன. உதாரணமாக இக்காரில் பக்காவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக கேமிராக்கள் இடம்பெற இருக்கின்றன.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

அதேபோன்று, நேரான சாலையில்கூட எளிதாக யு டர்ன் செய்யக்கூடிய வகையில் சுலபமான ஹேண்டிலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று எக்கசக்கமான தொழில்நுட்ப வசதிகள் அக்காரில் இடம்பெறவிருக்கின்றன. இந்த கார் முன்னதாக ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமே வருகின்ற அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதுதான் ஹோண்டாவின் முதல் மின்சார கார்... ஆனா நமக்குதான் கொடுத்து வைக்கல...

ஆகையால், பிற நாடுகளில் இக்கார் களமிறங்குவது இப்போதைக்கு சந்தேகம்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், பிற நாடுகளில் மின் வாகன சந்தை இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பதும் ஹோண்டாவின் இந்த பின் வாங்களுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Introduced Its First-Ever All Battery Car e. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X