2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

2020 ஜாஸ் ஹேட்ச்பேக் கார், பிஎஸ்6 தரத்தில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் டீசர் போட்டோ ஒன்றின் மூலமாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎஸ்6 காரில் வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

இந்த வகையில் இந்த பிஎஸ்6 ஹேட்ச்பேக் காரில் தற்போதைய பிஎஸ்4 மாடலில் உள்ள அதே பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் தான் பிஎஸ்6 தரத்தில் கொடுக்கப்படவுள்ளது. ஜாஸ் மாடலின் பிஎஸ்4 பெட்ரோல் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டு வரும் 1.2 லிட்டர் என்ஜினானது 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

இதனுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் வேரியண்ட்டில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 98 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஜாஸ் மாடல் பெரும்பான்மையான டிசைன் பாகங்களை மிக சிறிய அளவிலான மாற்றங்களுடன் தற்போதைய ஜாஸ் காரில் இருந்து அப்படியே பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிஎஸ்6 கார்களும் சிறிய அளவிலான மாற்றங்களையாவது பெற்றிருப்பதால், ஜாஸ் பிஎஸ்6 மாடலிலும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

குறிப்பாக இந்த பிஎஸ்6 காரின் உட்புற கேபின் சிறிது அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். இதன்படி, வழக்கமான டச்பேட் ஏர்-கான் கண்ட்ரோலுக்கு பதிலாக பொத்தானை ஜாஸ் பிஎஸ்6 மாடல் உட்புறத்தில் பெற்றிருக்கும் என தெரிகிறது. இவற்றுடன் டேஸ்போர்டின் டிசைனிலும் அப்டேட்களை ஹோண்டா நிறுவனம் கொண்டு வந்திருக்கும் என நம்பலாம்.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

என்ஜின் தேர்வுகளுடன் பிஎஸ்6 ஜாஸ் கார் வழக்கமான தொழிற்நுட்பங்களையும் தொடரவுள்ளது. இந்த வகையில் இந்த ஹேட்ச்பேக் காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கூடிய 7-இன்ச்சில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

மேலும் இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மூலமாக ப்ளூடூத் இணைப்பு, க்ரூஸ் கண்ட்ரோல், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெறலாம். காரின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செயல்பாடுகளுக்கு பொத்தான் உள்ளது.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த ஹேட்ச்பேக் காரானது, இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்ஸ் உடன் உள்ள பின்புற கேமிரா, ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை ஹேங்கர் போன்றவை உள்ளன.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

ஜாஸ் மாடலின் டாப் ட்ரிம்கள் மட்டும் ஆறு காற்றுப்பைகளை பெறவுள்ளன. அறிமுகத்திற்கு பிறகு ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ, மாருதி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட ஹேட்ச்பேக் கார்கள் போட்டியினை அளிக்கவுள்ளன.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

இருப்பினும் ஜாஸ் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை சந்தையில் பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் போட்டி மாடல்கள் பலவற்றிற்கு டீசல் என்ஜின் தேர்வு இல்லை.

2020 ஜாஸ் பிஎஸ்6 காரில் இரு என்ஜின் தேர்வுகளை தொடரும் ஹோண்டா...!

தற்போதைய பிஎஸ்4 மாடலை விட சிறிது கூடுதலான விலையை பெறவுள்ள இந்த பிஎஸ்6 காரின் எக்ஸ்ஷோரூம் விலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிஎஸ்6 ஜாஸ் மாடல் உட்புறத்தில் அதிக அளவிலான காலி இடங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனுடன் இரு என்ஜின் தேர்வுகளை இந்த காரில் ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளதால் இதன் அறிமுகம் சந்தையில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Jazz BS6 engine specification revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X