ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

ஹோண்டா ஜாஸ் கார் பிஎஸ்6 எஞ்சின் தேர்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது. ஆனால், விலை கூடுதலாக இருப்பதும், ஹோண்டாவின் விற்பனை யுக்திகளும் ஜாஸ் காரின் சந்தையை மிக வலுவானதாக மாற்றவில்லை.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பிஎஸ்4 மாடல்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம். பிஆர்வி எஸ்யூவி, ஜாஸ் உள்ளிட்ட மாடல்கள் நேற்று முன்தினத்துடன் விற்பனை நிறுத்தப்பட்டது. பிஆர்வி எஸ்யூவி விற்பனைக்கு நிறுத்தப்பட்ட நிலையில், ஜாஸ் பிஎஸ்6 எஞ்சின் தேர்வில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

அந்த எதிர்பார்ப்பை உறுதி செய்யும் விதத்தில் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே, மிக விரைவில் ஜாஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ்6 மாடலானது பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இதே எஞ்சின் தேர்வுகள் டபிள்யூஆர்வி ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பயன்படுத்தப்படும்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோ்ல எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்கள் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு தக்க வைக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

டீசல் மாடலானது 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இது மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், அதிக செயல்திறனையும் வழங்கும் எஞ்சின் தேர்வாக இருக்கும்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

பிஎஸ்6 ஹோண்டா ஜாஸ் காரில் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் வாய்ப்புள்ளது. அதபோன்று, மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவையும் வழங்கப்படும் என தெரிகிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் டீசர் வெளியீடு... விரைவில் வருகிறது!

தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையல் பிஎஸ்6 ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும். புதிய ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ்6 மாடலாானது மாருதி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா, ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Honda Cars has teased the Jazz premium hatchback ahead of the India launch.
Story first published: Thursday, April 2, 2020, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X