அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

இந்த மாத துவக்கத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டதை தொடர்ந்து 2020 ஹோண்டா ஜாஸ் மாடலின் வேரியண்ட்களின் விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

2020 ஜாஸ் மாடலை வாங்க விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஹோண்டா டீலர்ஷிப்களையோ அல்லது ஹோண்டாவின் ‘வீட்டில் இருந்தப்படியே ஹோண்டா ' என்ற இணையத்தள பக்கத்தையோ அணுகலாம்.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

இந்த நிலையில் டீம் பிஎச்பி செய்தி தளம் மூலம் தற்போது கசிந்துள்ள படங்களின் மூலம் டாடா அல்ட்ராஸிற்கு போட்டியாக இந்த பிஎஸ்6 மாடல் நாளை (ஆகஸ்ட் 26) வெளிவரவுள்ளது உறுதியாகுகிறது. வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த காரின் முழு விபரங்கள் அறிமுகத்தின்போது தான் வெளியாகும்.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

ஆனால் அதற்கு முன்னதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் வேரியண்ட்களை பற்றிய சில விபரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த வகையில் 2020 ஜாஸ் மாடலின் வி வேரியண்ட் எல்இடி டிஆர்எல்கள், பளபளப்பான கருப்பு நிறத்தில் முன்புற க்ரில், க்ரூஸ் கண்ட்ரோல், கத்தி வடிவிலான சாவி, பின்பக்க பார்க்கிங் சென்சார்ஸ், ஸ்டேரிங் சக்கர கண்ட்ரோல்களில் க்ரோம் ரிங் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

அதேநேரம் விஎக்ஸ் வேரியண்ட்டில் மென்மையான தொடு பேட் டேஸ்போர்டு, சிவப்பு & வெள்ளை நிறத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், கீலெஸ் ரிமோட் உடன் ஹோண்டா ஸ்மார்ட் கீ சிஸ்டம் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

டாப் இசட்எக்ஸ் வேரியண்ட் ஒரு தொடுதல் செயல்பாட்டுடன் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ ரிவர்ஸ், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் அட்வான்ஸான எல்இடி ஹெட்லேம்ப்கள், அட்வான்ஸான எல்இடி தரத்தில் முன்புற ஃபாக் விளக்குகள் போன்ற அம்சங்களை ஏற்றுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 வெர்சனில் எத்தகைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் கிடைக்க பெறவில்லை.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

தற்போதைய பிஎஸ்4 ஜாஸ் காரில் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி வருகிறது. இந்த என்ஜின் உடன் பிஎஸ்6 ஜாஸ் மாடலில் மேனுவல் மற்றும் சிவிடி என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அறிமுகத்திற்கு முன்னதாக... 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 காரின் வேரியண்ட்களின் விபரங்கள் கசிந்தன...

ஹோண்டாவின் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான ஜாஸின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த ஹேட்ச்பேக் கார் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக விளங்கும்.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
2020 Honda Jazz BS6 variants leaked, expected launch tomorrow, 26 Aug
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X