ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அசத்தலான சிறப்பம்சங்கள், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

சிறந்த மாடல்

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ஹோண்டா ஜாஸ் கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையான எஞ்சின் தேர்வு மற்றும் தோற்றத்தில் மாற்றங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் தேர்வில், மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடல்களானது V, VX மற்றும் ZX என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எஞ்சின் விபரம்

இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. இதன் ரகத்தில் முதல்முறையாக ரேஸ் கார்களின் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்படுவது போன்ற பேடில் ஷிஃப்ட் கியர் மாற்றும் வசதி இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மைலேஜ்

பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 17.1 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

எல்இடி லைட் அட்டகாசம்

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டிசைனில் சிறிய மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. விசேஷ கருப்பு வண்ணத்திலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், புதிய பம்பர்கள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் மிகவும் பிரிமீயமான அம்சங்களுடன் வந்துள்ளது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் மென்மையான தொடு உணர்வை தரும் உயர்தர டேஷ்போர்டு அமைப்பு, டிஜிபேட் 2.0 கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

முக்கிய வசதிகள்

க்ரூஸ் கன்ட்ரோல், தொடுதிரை கட்டுப்பாட்டு பேனல் மூலமாக கட்டுப்படுத்தும் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் வசதி, வாய்ஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, ஸ்மார்ட் கீ, எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதிகளும் உள்ளன.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பாதுகாப்பு வசதிகள்

விசேஷ பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய உடல்கூடு, டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இம்மொபைலைசர், கை அல்லது ஏதேனும் தடை இருந்தால், தானியங்கி முறையில் ஜன்னல் கண்ணாடி இறங்கும் வசதி, மோதல் தாக்கத்தை உணர்ந்து ஓட்டுனர், பயணியின் தலையை காக்கும் வகையில் சிறப்பு தொழில்நுட்பம் கொண்ட ஹெட்ரெஸ்ட்டுகள் என பட்டியல் நீள்கிறது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

வண்ணத் தேர்வுகள்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக், லூனார் சில்வர் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் கோல்டன் பிரவுன் மெட்டாலிக் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மேனுவல் வேரியண்ட் விலை விபரம்

புதிய ஹோண்டா ஜாஸ் கார் பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்துள்ளது. பெட்ரோல் மேனுவல் மாடலின் வி என்ற பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.49 லட்சமும், நடுத்தர விலையுடைய விஎக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.09 லட்சமும், அதிக வசதிகள் கொண்ட இசட்எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.73 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விலை விபரம்

புதிய ஹோண்டா ஜாஸ் பெட்ரோல் சிவிடி மாடலின் வி வேரிண்ட்டிற்கு ரூ.8.49 லட்சமும், விஎக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.8.09 லட்சமும், இசட்எக்ஸ் டாப் வேரியண்ட்டிற்கு ரூ.9.73 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, மேனுவல் வேரியண்ட்டைவிட ரூ.1 லட்சம் கூடுதல் விலையில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு நிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மதிப்பு வாய்ந்த தேர்வு

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ கார்களுடன் இந்த புதிய ஹோண்டா ஜாஸ் கார் மோதும். ஆனால், போட்டியாளர்களைவிட மிகவும் பிரிமீயமான மாடலாக இந்த கார் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அதிக சிறப்பம்சங்களுடன் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாக வந்துள்ளது.

Most Read Articles
English summary
Honda has launched the new Jazz facelift model in India with prices starting at Rs 7.50 lakh (Ex-Showroom).
Story first published: Wednesday, August 26, 2020, 13:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X