இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

ஹோண்டா கார் நிறுவனம் சமீபத்திய அறிமுக மாடலான டபிள்யூஆர்வி அப்டேட் செர்சனை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்ததுபோல் மாற்றியமைத்து கொள்ளும் வகையில் ஆக்ஸஸரீகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

ஹோண்டா நிறுவனத்தின் இணைய பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆக்ஸஸரீகள் மூலம் காரின் பெரும்பான்மையான பாகங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். இந்த ஆக்ஸஸரீகளில் வெவ்வேறு விதமான க்ரோம்கள், கதவு விஸர்கள், பம்பர் பாதுகாப்பான்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்டவை அடங்கும்.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

இவற்றுடன் உட்புறத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஸ்டைலிங் பாகங்களையும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். இவ்வாறு கேபினிற்கு பயன்படுத்தக்கூடிய ஆக்ஸஸரீகளாக ஸ்டேரிங் சக்கர கவர், வித்தியாசமான மேட்ஸ் மற்றும் இருக்கை கவர்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

இந்த ஆக்ஸஸரீகளை வாங்குவது மற்றும் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த அனைத்து தகவல்களையும் வாடிக்கையாளர்கள் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

இந்த தனிப்பயனாக்குதல் திட்டத்தில் இன்னும் ஆன்லைன் உள்ளமைவு உள்ளடகப்படவில்லை. ஆன்லைன் உள்ளமைவு, ஒவ்வொரு ஆக்ஸஸரீயும் பொருத்தப்பட்ட பின்பு கார் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்த கொள்ள உதவியாக இருந்திருக்கும்.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

இருப்பினும் டீலர்களிடம் இந்த ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட பின்பு கிடைக்கும் தோற்றத்தை அனுபவமாக பெற்று கொள்ளலாம். ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட காரையும் அதே டீலர்ஷிப் மூலமாக வாடிக்கையாளர்கள் டெலிவிரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

ஹோண்டாவின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான டபிள்யூஆர்வி முதன்முதலாக இந்தியாவில் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாத துவக்கத்தில் பிஎஸ்6 என்ஜின் உடன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இதன் புதிய தலைமுறை கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

சற்று க்ராஸ்ஓவர் தோற்றத்திலும் காட்சியளிப்பதால் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துவரும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 98 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கி வருகிறது. இதன் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இனி ஹோண்டா டபிள்யூஆர்-வி காரை உங்களுக்கு பிடித்தாற்போல் மாற்றி கொள்ளலாம்... ஆக்ஸஸரீகள் அறிவிப்பு...

ஆட்டோமேட்டிக் தேர்வில் விற்பனை செய்யப்படாத டபிள்யூஆர்வி ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையை ரூ.8.50 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரையில் ஹோண்டா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. சந்தையில் இந்த காம்பெக்ட் எஸ்யூவிக்கு போட்டியாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda #honda wrv
English summary
Honda lists accessories for the 2020 WR-V on its website
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X