எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

புதிய எஸ்யூவி மாடல்களின் தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் தீவிரமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ராஜேஷ் கோய்ல் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

இந்திய சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏகப்பட்ட புதிய எஸ்யூவி மாடல்களும் அவற்றை தயாரிப்பதில் பிரபலமான எம்ஜி, கியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் சிலவும் இந்தியாவில் நுழைந்துள்ளன.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

இந்த வகையில் ஹோண்டா இந்தியா நிறுவனமும் புதியதாக எஸ்யூவி மாடல் ஒன்றை சந்தையில் களமிறக்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ராஜேஷ் கோய்ல் கூறுகையில், எங்களது முழு செடான் லைன்-அப் தற்சமயம் நீண்டதாகவே உள்ளது. ஆனால் எஸ்யூவி லைன்-அப்பில் தான் சிறிய இடைவெளி உள்ளது என கூறியுள்ளார்.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

ஏனெனில் இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு சிஆர்-வி எஸ்யூவி மற்றும் ஜாஸ் மாடலின் அடிப்படையிலான டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் கார்கள் மட்டும் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் நமது நாட்டு சந்தையில் பிஆர்-வி எம்பிவி மற்றும் எச்ஆர்-வி மிட்சைஸ் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டமிட்டு வருகிறது.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை விரைவாக நிறைவேற்றும் வகையில் முன்னோக்கி செல்லவுள்ளோம் என கூறியுள்ள கோய்ல், எனது லைன்-அப்பை பொறுத்தவரையில், எஸ்யூவி மாடல்கள் தேவைப்படுகின்றன. நாங்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

இந்நிறுவனத்தின் சில எஸ்யூவி மாடல்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்திய சந்தைக்கு ஏற்றவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

முன்னதாக இந்நிறுவனம் இந்தியாவிற்காக புதிய இரு எஸ்யூவி கார்களின் விற்பனையில் பணியாற்றி வருவதாக நமது தளத்தில் தெரிவித்திருந்தோம். 2யுஏ குறியீட்டு பெயருடன் உள்ள ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ள இந்த எஸ்யூவி மாடல்கள் இரண்டாம்-தலைமுறை அமேஸ் மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும்.

எஸ்யூவி தயாரிப்புகளை அதிகப்படுத்தும் முயற்சியில் ஹோண்டா இந்தியா...

இதில் முதல் தயாரிப்பு சப்-4 மீட்டர் எஸ்யூவியாக மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ மாடல்களுக்கு போட்டியாக விளங்கும். இதன் அறிமுகம் 2022ல் நடைபெறும் என தெரிகிறது. மற்றொரு 4.2- 4.3 மீட்டர் நீளத்தில் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாடல்களுக்கு விற்பனையில் போட்டியினை அளிக்கும் விதத்தில் இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda India actively looking at expanding SUV range
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X