ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

பிஎஸ்-6 எஞ்சினுடன் தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்டு வரும் புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு இந்தியாவில் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக இன்று துவங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஹோண்டா ஜாஸ் கார் உள்ளது. அருமையான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் வசதிகளுடன், ஹோண்டாவின் நம்பகமான கார் மாடலாகவும் பெயர் பெற்றுள்ளது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் பிஎஸ்-6 எஞ்சினுடன் ஹோண்டா ஜாஸ் கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பிரச்னையால் ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலின் அறிமுகம் தள்ளிப்போனது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த நிலையில், பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், கொரோனா பிடியிலிருந்து மெல்ல விலகி இயல்பு நிலைக்கு கார் மார்க்கெட் திரும்ப துவ்ங்கி இருக்கிறது. இதனை மனதில் வைத்து, புதிய ஹோண்டா ஜாஸ் கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு தக்கவாறு, இன்றுமுதல் புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

அங்கீகாரம் பெற்ற ஹோண்டா டீலர்களில் ரூ.21,000 முன்பணம் செலுத்தியும், ஹோண்டா இணையதள பக்கத்தில் ரூ.5,000 முன்பணம் செலுத்தியும் புதிய ஜாஸ் பிஎஸ்-6 காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ்-6 மாடலானது 1.5 லிட்டர் எஞ்சின் தேர்வில் மட்டுமே வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

இந்த புதிய மாடலின் சிவிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளில் ஸ்டீயரிங் வீலிலேயே டியூவல் மோடு பேடில் ஷிஃப்ட் வசதி இடம்பெற இருப்பதும் மிக முக்கிய அம்சமாக குறிப்பிடப்படும்.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

புதிய ஹோண்டா ஜாஸ் காரில் விசேஷ கருப்பு வண்ணத்திலான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு பெற்ற டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், புதிய பம்பர் அமைப்புடன் வர இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் பிஎஸ்-6 மாடலுக்கு முன்பதிவு துவங்கியது!

அதேபோன்று, உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் அலெக்ஸா வாய்ஸ் கமாண்ட் வசதியும் கொடுக்கப்பட உள்ளது. இந்த காரில் ஒன் டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் இடம்பெறுகிறது.

குறிப்பு: முதல் ஸ்லைடை தவிர்த்து பிற ஸ்லைடுகளில் மாதிரிக்காக பிஎஸ்-4 ஜாஸ் காரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.

Most Read Articles
English summary
Honda has started accepting pre-bookings for new Jazz car with a BS6 compliant petrol engine option in India.
Story first published: Monday, August 10, 2020, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X