உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்கிறது ஹோண்டா!

தொழில்நுட்ப பிரச்னையை பரிசோதிக்கும் விதமாக, ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை இந்தியாவில் திரும்பி அழைக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா கார்களில் தொழில்நுட்ப பிர்சனை இருப்பது தெரிய வந்துள்ளது. ஹோண்டா அமேஸ், சிட்டி, ஜாஸ், டபிள்யூ-ஆர்வி, பிஆர்-வி, பிரியோ மற்றும் சிஆர்வி ஆகிய அனைத்து கார்களிலும் இந்த பிரச்னை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

அதாவது, எரிபொருள் கலனிலிருந்து எஞ்சினுக்கு எரிபொருளை பம்ப் செய்து கொடுக்கும் இம்பெல்லர் உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கார் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படும் என்றும் தெரிகிறது.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை திரும்ப அழைத்து பரிசோதிக்க இருப்பதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைபாடுடைய இம்பெல்லர் கொண்ட ஃப்யூவல் பம்ப்பை மாற்றித் தருவதற்கும் திட்டமிட்டுளளது.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

கடந்த 2018ம் ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 32,498 அமேஸ் கார்கள், 16,434 சிட்டி கார்கள், 7,500 ஜாஸ் கார்கள், 7.057 டபிள்யூ-ஆர்வி கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

அதேபோன்று, இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 1,622 பிஆர்-வி கார்கள், 360 பிரியோ கார்கள், 180 சிஆர்வி எஸ்யூவிகளும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இடம்பெற இருக்கின்றன. மொத்தமாக 65,651 கார்களை திரும்ப அழைக்க உள்ளது ஹோண்டா.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

வரும் 20ந் தேதி முதல் இந்த திரும்ப பெறும் நடவடிக்கை துவங்கப்படும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

கொரோனா பிரச்னை காரணமாக, குறைவான பணியாளர்களுடன் சர்வீஸ் மையங்கள் இயங்கி வருவதால், முன்பதிவு செய்து கொண்டு தங்களது காரை சர்வீஸ் மையத்திற்கு எடுத்து வருவமாறு ஹோண்டா கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த திரும்ப பெறும் நடவடிக்கையானது நிறைவு செய்வதற்கு சற்று கூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்றும் தெரிகிறது.

உதிரிபாகத்தில் குறைபாடு... ஒரே நேரத்தில் 7 கார் மாடல்களை ரீகால் செய்யும் ஹோண்டா!

இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் உங்களது கார் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஹோண்டா இணையதளத்தில் உங்களது காரின் 17 இலக்க வின் நம்பரை பதிவு செய்து விபரங்களை பெற முடியும். இங்கே க்ளிக் செய்து அதற்கான விபரங்களை ஹோண்டா வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Honda Cars India has announced a recall on a range of models over a possible fault in the fuel pump. As per the recall report, more than 65,000 cars of various models could have been affected and are being serviced.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X