கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

மாருதி பலேனோ காருக்கு கடும் போட்டியை தரும் விதத்தில், அசத்தும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஹோண்டா ஜாஸ் காரின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் மார்க்கெட்டில் மதிப்புமிக்க தேர்வாக ஹோண்டா ஜாஸ் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு உட்பட்ட எஞ்சினுடன் விரைவில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

இந்த ரகத்தில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு அடுத்து ஹோண்டா ஜாஸ் என்ற நிலைமை இருந்து வந்தது. ஆனால், டாடா அல்ட்ராஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா கார்களால் ஹோண்டா ஜாஸ் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

MOST READ: பைடன் எம்-பைட் எலக்ட்ரிக் எஸ்யூவியின் தயாரிப்பு பணிகள் துவங்கின... சீனாவில் இந்த வருடம் அறிமுகம்...

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

எனவே, மீண்டும் டாப் 3 இடத்திற்குள் வரும் வகையில் ஜாஸ் காரின் பிஎஸ்6 மாடலில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய இருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம். இந்த மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் ஹைலைட்டாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருப்பது தெரிய வருகிறது. மேலும், புதிய க்ரில் அமைப்பும், எல்இடி பனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: அரசியல்வாதியின் கடைசி ஆசை... விலையுயர்ந்த பென்ஸ் காரை ஒன்று கூடி புதைத்த ஊர் மக்கள்...

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

புதிய அலாய் வீல்கள், முன்புற பம்பர் அமைப்பு, பெரிய ஏர் டேம் அமைப்பும் முக்கிய மாற்றங்களாக தெரிகிறது. மற்றபடி, டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை என்று கருதலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

உட்புறத்திலும் அதிக மாற்றங்கள் இருக்காது என்று நம்பலாம். இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் என தெரிகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளையும் சப்போர்ட் செய்யும்.

MOST READ: கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

ஹோண்டா ஜாஸ் காரில் வழங்கப்பட்டு வந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

இதன் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

MOST READ: 1 ரூபா செலவில்லாம 32,000 கிமீ ஓட்டியாச்சு.. கோனா மின்சார காரின் உரிமையாளர் பெறுமிதம்.. இது உண்மைதானா

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

பெட்ரோல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறும். தவிரவும், பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. எனினும், அறிமுகத்தின்போதுதான் உறுதியாக தெரிய வரும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் அசத்த வரும் புதிய ஹோண்டா ஜாஸ் கார்!

பிஎஸ்4 மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா, ஃபோக்ஸ்வேகன் போலோ, டாடா அல்ட்ராஸ் கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Honda Cars India has released a new teaser for the upcoming Jazz BS6 and it will get some notable updates on engine and features.
Story first published: Thursday, April 16, 2020, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X