2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

ஹோண்டா மோட்டார்சைக்கிள்& ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரபல பைக் மாடலான யூனிகார்ன்-ஐ பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து இன்று சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.93,593-ஐ எக்ஸ்ஷோரூம் விலையாக பெற்றுள்ள இந்த பிஎஸ்6 பைக் முந்தைய மாடல் பைக்கை விட ரூ.13,500-ஐ விலை உயர்வாக பெற்றுள்ளது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

பிஎஸ்6 அப்டேட்டால் ஹோண்டா யூனிகார்ன் பைக் தனது வழக்கமான 150சிசி என்ஜினில் இருந்து 160சிசி என்ஜினிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் 150சிசி வெர்சனின் விற்பனை இந்தியாவில் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

இந்த மாற்றத்தால் பைக் பிஎஸ்6 என்ஜினை மட்டுமில்லாமல் ப்ரீமியம் டிசைன் தோற்றத்தையும் பெற்றுள்ளது. இதேபோல் என்ஜின் கில் ஸ்விட்சையும் இந்த யூனிகார்ன் பிஎஸ்6 பைக்கில் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

2020 யூனிகார்ன் பிஎஸ்6 பைக்கின் அறிமுகத்தின்போது ஹோண்டா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ மினோரு கடோ பேசுகையில், யூனிகார்ன், இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மோட்டார்சைக்கிள் ஆகும்.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

மறுசுழற்சி என்ஜின் மற்றும் மெருதுவான செயல்திறனால் அறிமுகமான காலத்தில் இருந்து தற்போது வரை சிறப்பாக விற்பனையாகும் 150சிசி பைக்காக இருந்து வருகிறது. இந்த பைக் முதன்முதலாக சந்தைக்கு வந்து 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களின் முதல் தேர்வாக யூனிகார்ன் மாடல் பைக் தான் இருந்து வருகிறது என கூறினார்.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

பிஎஸ்6-க்கு இணக்கமான 162.7சிசி என்ஜினுடன் சந்தைக்கு வந்துள்ள இந்த 2020 பைக்கின் என்ஜின் அமைப்பில் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் மற்றும் ஹோண்டா ஈக்கோ தொழிற்நுட்பம் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த என்ஜின் இதன் 150சிசி வெர்சனில் வழங்கிய 7500 ஆர்பிஎம்-ல் 12.73 பிஎச்பி என்ற ஆற்றலை தான் இந்த 160சிசி பைக்கிற்கும் வழங்கவுள்ளது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

ஆனால் 5000 ஆர்பிஎம்-ல் 14 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தவுள்ளது. இதன் முந்தைய தலைமுறை கார் 12.8 என்எம் டார்க் திறனை தான் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தி வந்தது. மேலும் இந்த புதிய என்ஜினில் இருந்து சிறந்த எரிபொருள் திறனையும் அதிக லோ-எண்ட் டார்க்-ஐயும் எதிர்பார்க்கலாம்.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

மேலும் யூனிகார்ன் பிஎஸ்6 மாடலின் இந்த புதிய என்ஜின் அமைப்பில் எடை-சமநிலையை கணக்கிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால் இயக்கத்தின்போது குறைவான அதிர்வையும் மென்மையான முடுக்கத்தையும் பெற முடியும்.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

டிசைன் அமைப்பை பொறுத்தவரை, புதிய பார்டரில் முன்புற முகப்புத்தாங்கியையும், 3டி ஹோண்டா லோகோவையும் இந்த பிஎஸ்6 பைக் பெற்றுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் நீல நிறத்தில் செமி-டிஜிட்டலில் கொடுக்கப்பட்டுள்ளது.

பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 8 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருக்கையின் நீளமும் 24மிமீ நீண்டுள்ளது. இதனால் தொலைத்தூர பயணங்களின்போது இருக்கையில் அமர்வதற்கு மிகவும் சவுகரியமாக இருக்கும்.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

இந்த பிஎஸ்6 பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றமாக என்ஜின் கில் ஸ்விட்ச் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பிஎஸ்6 பைக்கிற்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வரும் மாதங்களில் குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதிய எச்இடி லோ ரோலிங் ட்யூப்லெஸ் டயர்களுடன் முன்புறத்தில் ஸ்போர்ட் டெலிஸ்கோப் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோஷாக்கும் வழக்கம்போல் சஸ்பென்ஷன் அமைப்பாக தொடர்ந்துள்ளன. இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

சில அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் மற்றும் குறைவான பராமரிப்பிற்காக சீல் ஜெயினும் இந்த பைக்குடன் கொடுக்கப்படவுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் மற்ற பிஎஸ்6 பைக்குகளை போல் யூனிகார்ன் பிஎஸ்6 மாடலுக்கும் 6 வருட உத்தரவாதம் (நிலையாக 3 வருடங்கள் + கூடுதல் தேர்வாக 3 வருடங்கள்) அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் யூனிகார்ன் பிஎஸ்6 பைக், பெர்ல் இக்னியஸ் ப்ளாக், உயர்ரக தோற்றத்தை வழங்கக்கூடிய ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் என்ற மூன்று நிறத்தேர்வுகளில் டீலர்ஷிப்களிடம் விற்பனை செய்யப்படவுள்ளது.

2020 ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா..?

இந்த பைக்கில் உள்ள அட்வான்ஸான PGM-FI HET 160 cc என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவு அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஹோண்டா யூனிகார்ன் பைக் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்.

Most Read Articles
English summary
2020 Honda CB Unicorn 160 ABS Launched In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X