மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஆண்டு கடைசி நெருங்குவதை முன்னிட்டு, ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

சேமிப்புச் சலுகைகள் விபரம்

ஆண்டு கடைசி நெருங்கும் டிசம்பர் மாதத்தில் அனைத்து வாகன நிறுவனங்களும் டிஸ்கவுண்ட் மற்றும் சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வழங்குவது வழக்கம். இருப்பு இருக்கும் கார்களை விற்றுத் தீர்க்கும் விதமாக இந்த யுக்தியை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

மேலும், புத்தாண்டில் கார்களின் விலையை பெரும்பாலான நிறுவனங்கள் உயர்த்தும் என்பதால், வாடிக்கையாளர்களும் இந்த சேமிப்புச் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு புதிய கார் வாங்குவதற்கு முடிவு செய்கின்றனர்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரூ.2.50 லட்சம் வரை சேமிப்பு

ஆண்டு கடைசி நெருங்குவதையடுத்து, ஹோண்டா கார் நிறுவனம் ரூ.2.50 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. விலையில் நேரடி தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ், கூடுதல் கால வாரண்டி திட்டம் ஆகியவையும் இதில் அடங்கும்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.37,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்குவோருக்கு ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பாக பெற முடியும். மேலும், 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கு ரூ.12,000 மதிப்புடைய கூடுதல் கால வாரண்டியை கட்டணமில்லாமல் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

அமேஸ் ஸ்பெஷல் எடிசன்

அமேஸ் ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.15,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.7,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.8,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அமேஸ் எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலுக்கு ரூ.27,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.12,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.40,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹோண்டா டபிள்யூஆர்வி

ஹோண்டா டபிள்யூஆர்வி காருக்கு ரூ.40,000 வரையில் சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.25,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும். எக்ஸ்க்ளூசிவ் எடிசன் மாடலுக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெற முடியும்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹோண்டா சிவிக்

ஹோண்டா சிட்டி காருக்கு ரூ.30,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதேபோன்று, ஹோண்டா சிவிக் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகளையும் பெற முடியும்.

சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களை அருகாமையிலுள்ள ஹோண்டா டீலர்களில் கேட்டு முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மிஸ் பண்ணிடாதீங்க... ஹோண்டா கார்கள் மீது ரூ.2.50 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ஹோண்டா நிறுவனம் இந்த ஆஃபர்களை பொதுவாக அறிவித்துள்ளது. டீலர்களில் இந்த சேமிப்புச் சலுகைகள் வேறுபடலாம். எனவே, சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் குறித்த விபரங்களை அருகாமையிலுள்ள ஹோண்டா டீலர்களில் கேட்டு முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Honda has announced special offers on cars upto Rs.2.50 lakhs including cash discount and exchange bonus on all BS6 models.
Story first published: Thursday, December 3, 2020, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X