Just In
- 1 hr ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- 9 hrs ago
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- 10 hrs ago
2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்
- 11 hrs ago
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Movies
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெப்பமும், பம்பர் டூ பம்பர் டிராபிக்கும்தான் எதிரிகள்... எலெக்ட்ரிக் காரில் அதிக மைலேஜ் பெறுவதற்கான ட்ரிக்...
எலெக்ட்ரிக் காரில் அதிக ரேஞ்ச் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். இவை உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு பலர் தயங்குவதற்கு காரணமே ரேஞ்ச் பற்றிய பயம்தான். ஒரு முறை முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் கார் எவ்வளவு தூரம் பயணிக்கும்? என்பதுதான் ரேஞ்ச். முன்பை விட தற்போது அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாக தொடங்கியுள்ளன.

இருந்தாலும் ரேஞ்ச் பற்றிய தயக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து கொண்டேதான் உள்ளது. எலெக்ட்ரிக் காரில் பேட்டரி தீர்ந்து நடுவழியில் நிற்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்தான். ஆனால் ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ஜை அதிகரிக்க முடியும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

1. 'ஸ்மூத்' ஆக ஓட்டுங்கள்!
எலெக்ட்ரிக் காரை கரடுமுரடாக ஓட்டினால், பேட்டரி விரைவில் காலியாகி விடும். ஆக்ரோஷமாக ஆக்ஸலரேஷன் கொடுப்பது என்பது எந்த ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை பாதித்து விடும். எலெக்ட்ரிக் கார்களும் அதற்கு விதி விலக்கு கிடையாது. நிலையான ஒரு வேகத்தை எட்டும் வரை ஆக்ஸலரேட்டரை ஸ்மூத் ஆக பயன்படுத்துவதுதான், எலெக்ட்ரிக் கார்களின் ரேஞ்ஜை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

2. ஓவர் ஸ்பீடு வேண்டாமே!
மணிக்கு 50 மைல்கள் வேகத்திற்கு மேல் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். இதன் மூலம் அதிவேகத்தில் சென்றதற்கான அபராத ரசீதை பெறுவதை தவிர்ப்பதுடன், உங்கள் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜையும் உங்களால் மேம்படுத்த முடியும். உங்கள் வேகத்தை மணிக்கு 10 மைல்கள் என்ற அளவில் குறைத்தால், நீங்கள் 14 சதவீத ஆற்றலை குறைவாக பயன்படுத்த முடியும் என ஆய்வு ஒன்று சொல்கிறது.

3. ஈக்கோ மோடு பயன்படுத்துங்கள்!
உங்கள் எலெக்ட்ரிக் காரில், ஈக்கோ மோடு இருந்தால், கனிவான ஆக்ஸலரேஷனுக்கு அதை பயன்படுத்துங்கள். கார் உற்பத்தி நிறுவனங்கள் ஈக்கோ மோடை வழங்குவதற்கு பின்னால், நிச்சயமாக ஒரு திட்டவட்டமான காரணம் உள்ளது. செயல்திறனில் பெரிதாக வித்தியாசம் இருக்காது எனும் நிலையில், இது உங்களுக்கு கூடுதல் ரேஞ்சை கொடுக்கும்.

4. வெப்பத்தை தவிர்த்து விடுங்கள்!
எலெக்ட்ரிக் கார்களின் மிக முக்கியமான எதிரியே வெப்பம்தான். எலெக்ட்ரிக் கார்களின் உரிமையாளர்கள் அனைவரும், இதை கவனத்துடன் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் எலெக்ட்ரிக் காரை வெப்பமான பகுதிகளில் நிறுத்தியிருக்கும்போதெல்லாம், சென்சார்களுக்கு பவரை சப்ளை செய்ய பேட்டரி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அத்துடன் காரை ஸ்டார்ட் செய்தவுடன் நீங்கள் ஏசி-யையும் ஆன் செய்வீர்கள். வழக்கமான ஐசி இன்ஜின் கார்களில் ஏசி-யை ஆன் செய்து வைத்திருக்கும் சமயங்களில், எப்படி எரிபொருள் பயன்படுத்தப்படுகிறதோ, அதேபோல் எலெக்ட்ரிக் கார்களில் இது சார்ஜை குறைத்து விடும். எனவே இதனை மனதில் வைத்து செயல்படுங்கள்.

இதுவே உங்கள் எலெக்ட்ரிக் காரை நீங்கள் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்தால், குறைவான வேகத்தில் நீங்கள் ஏசி-யை பயன்படுத்தி கொள்ள முடியும். இது நல்ல ரேஞ்ச் கிடைக்க உதவி செய்யும். கூடுமான வரையில் எலெக்ட்ரிக் கார்களை வெப்பமான இடங்களில் இருந்து விலக்கி வைத்திருப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

5. பம்பர் டூ பம்பர் டிராபிக் வேண்டாமே!
எலெக்ட்ரிக் காரை ஓட்டும்போது, தூரம் சற்று அதிகமாக இருந்தாலும் கூட, போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. ஏனெனில் பம்பர் டூ பம்பர் டிராபிக், அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதைகள், அதிக சார்ஜை விழுங்கி விடும். எனவே உங்கள் எலெக்ட்ரிக் காரை ஓட்டும்போது, இதை மனதில் வைத்து கொண்டு பாதையை தேர்ந்து எடுங்கள்.