நீண்ட எதிர்பார்ப்பு நிறைவேறியது! ஹம்மர் இ-கார் அறிமுகம்! நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

ஹம்மர் நிறுவனத்தின் மின்சார கார் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரும் இதில் என்னென்ன சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

நீண்ட கால காத்திருப்பிற்கு பின்னர் ஜிஎம்சி நிறுவனத்தின் ஹம்மர் மின்சார பிக்-அப் டிரக் உலகளாவிய வெளியீட்டைப் பெற்றிருக்கின்று. மேலும், இக்கார் எப்போது கிடைக்கும் என ஏங்கி வந்தவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே உலகளாவிய அறிமுகம் அது பெற்றிருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

புதிய மின்சார வாகனத்தின் தோற்றம் பிக்-அப் டிரக் என்பதைக் காட்டிலும் ஆஃப்ரோடு பயணங்களுக்கு ஏற்ற வாகனம் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே உள்ளது. குறிப்பிட்ட கூற வேண்டுமானால் புதிய ஹம்மர் மின்சார கார் முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்ட மின்சார காராக காட்சியளிக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இந்த வாகனம் பற்றிய தகவல் வெளிவந்த ஆரம்ப காலத்திலேயே இனி ஹம்மர் பிராண்டில் மின்சார வாகனங்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து முதல் அறிமுகமாக ஹேம்மர் பிக்-அப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சிறப்பான திறன் வெளிப்பாட்டிற்காக 3 மின் மோட்டார்களை ஜிஎம்சி பொருத்தியிருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இதனால், அதீத திறன் கொண்ட மின்சார வாகனம் என்ற பட்டத்தை ஹம்மரின் புதிய மின்சார வாகனம் பெற்றிருக்கின்றது. இதற்கேற்ப இந்த ஒட்டுமொத்த மோட்டார்களும் இணைந்து 1,000 எச்பி மற்றும் 15,600 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இந்த திறனானது வெறும் 3 செகண்டுகளிலேயே பிக்-அப் டிரக்கை 0த்தில் இருந்து மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் செல்ல வைக்கும்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இத்துடன், 800 வோல்ட் திறன் கொண்ட பேட்டரி இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 160 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். இதை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 10 நிமிடங்களே போதும் என ஜிஎம்சி கூறுகின்றது. இது வியப்பை ஏற்படுத்தும் மிக அதி வேக ஃபாஸ்ட் சார்ஜ் திறன் ஆகும்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இந்த கார் விற்பனைக்கு வரும்போது 560 கிமீ ரேஞ்ஜை வழங்கக்கூடிய பேட்டரி பேக்குடன் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையேதான் ஜிஎம்சி நிறுவனமும் கூறியிருக்கின்றது. பேட்டரி பேக்கைப் போலவே இதன் டிசைனும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

புதிய ஹம்மர் மின்சார வாகனத்திற்கு எதிர்கால தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனத்தின் முகப்பு பகுதி ஓர் மான்ஸ்டரைப் போன்று காட்சியளிக்கின்றது. அதிலும், பானெட் மற்றும் பம்பருக்கு இடையில் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்கு கண் கவரும் வகையில் அமைந்துள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

நீளமான கோடு போல் காட்சியளிக்கும் அது ஓர் எல்இடி மின் விளக்காகும். ஹம்மர் எனும் எழுத்துக்களும் அதிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. இதன் இரு மூலைகளில்தான் டர்ன் இன்டிகேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் ஒளிரும்போது நிச்சயம் விநோதமான வாகன தோற்றத்தையே ஹம்மருக்கு வழங்கும்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

மேலும், பம்பரின் இரு முனைகளிலும் சிறிய உருவம் கொண்ட பனி விளக்குகள் இடம்பெற செய்யப்பட்டுள்ளன. புதிய ஹம்மர் மின்சார காரின் அட்டகாசமான தோற்றத்திற்கு இதுவும் ஓர் காரணியாகும். இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம். இது ஹம்மர் காரை விளம்பரம் செய்யும் விதமாக ஜிஎம்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட வீடியோவாகும்.

வடிவமைப்பில் உள்ள மற்றொரு சிறப்பம்சமாக காரின் மேற்கூரை உள்ளது. இது ஓர் அடிப்படையில் திறந்தவெளி வாகனமாகும். ஆம், தேவைப்பட்டால் கூரையை விரித்தோ அல்லது நீக்கியோப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதேபோன்று முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சிறந்த ஓட்டத்திற்காக 35 அங்குலம் கொண்ட பெரிய டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இதனை, 37 அங்குலம் வரை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த 4 சக்கரங்களுக்கும் திசை மாற்றும் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது, ஆஃப்ரோடு பயணத்தின்போது கார் சிக்கிக் கொண்டால் உடனடியாக காரை திசை திருப்ப உதவும். இத்துடன், கரடு முரடான சாலையில் பயணிக்கும்போது சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் விதமாக ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இதன்மூலம் ஹம்மரின் உயரத்தை 6 அங்குலங்கள் வரை உயர்த்திக் கொள்ள முடியும். இது எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்க உதவும். இந்த செயல்பாட்டை 'பிரித்தெடுக்கும் முறை' என ஜிஎம்சி குறிப்பிடுகின்றது. திரும்பும் டயர்கள், உயரத்தை அதிகப்படுத்தும் சஸ்பென்ஷன் என இவையனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய ஹம்மர் காரை நண்டு போல் நகர உதவுகின்றன.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

ஆம், ஹம்மர் காருக்கு அனைத்து விதமான சாலைகளையம் சமாளிக்கும் திறனை வழங்குகின்றது. இந்த சிறப்பு வசதியினாலே அனைவரின் கவனத்தையும் ஹம்மர் கவர்ந்துள்ளது. இத்துடன் கவர்தலைப் பெறும் வகையில் 18 வியூக்கள் கொண்ட கேமிரா வழங்கப்பட்டுள்ளது. இது காரை சுற்றியிருக்கும் பகுதியை ஒற்றை திரையில் மிக துள்ளியமாக காண உதவும்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இதுபோன்ற எக்கசக்க வசதிகள் ஹம்மர் மின்சார காரில் இடம்பெறவிருக்கின்றன. இதுதவிர ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு விதமான அப்டேட்டுகளுடன் அக்கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. தற்போது இக்காருக்கான புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கியிருக்கின்றது. குறைந்தபட்சம் 100 டாலர்கள் என்ற மதிப்பில் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு வருகின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹம்மர் மின்சார கார் அறிமுகம்... நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது!

இக்காரின் ஒட்டுமொத்த மதிப்பு 112,595 அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சங்கள் ஆகும். 2021ம் ஆண்டில் இருந்து இந்த மின்சார வாகன உற்பத்தித் தொடங்கப்படும் என ஜிஎம்சி கூறியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து தற்போது புக்கிங் செய்து வரும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த வருடத்தின் மத்தியில் இருந்தே டெலிவரி வழங்கப்படவும் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Hummer EV Pick-Up Truck Global Debut. Read In Tamil.
Story first published: Wednesday, October 21, 2020, 20:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X