ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது...

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வருமையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் விதமாக இரு பெரும் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

கொரோனா வைரசின் அச்சுறுத்தலின் காரணமாக உலகே உறைந்து கிடக்கின்றது. எந்த துறையும் செயல்படாத காரணத்தால் மக்களின் அத்தியாவசிய தேவை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் உள்ள நாடுகள் பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்றன.

அதிலும், தினக் கூலிகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை சற்றே கவலைக்கிடமானதாக மாறியிருக்கின்றது.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

இந்நிலையில், ஏழை மற்றும் எளியோர்களின் இந்த கஷ்ட காலத்தை போக்கும் விதமாக ஹூண்டாய் மற்றும் டைம்ளர் ஆகிய இரு நிறுவனங்களும் உதவ முன் வந்திருக்கின்றன. அவை, அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் அனைத்துத்துறையும் முடங்கிக் கிடைக்கின்றது. அதில் வாகனங்கள் சார்ந்த துறைகளும் அடங்கும்.

MOST READ: தீபாவளி ரிலீஸ் பட்டியலில் க்ளோஸ்டர்... கொரோனாவால் பின்வாங்காத எம்ஜி!

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

குறிப்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிலை விவரிக்க முடியாத அளவில் சிக்கலில் சிக்கியிருக்கின்றது. இருப்பினும், அவை கொரோனாவிற்கு எதிரான போரில் பெரும் உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் உதவி இன்றியமையாததாக மாறியிருக்கின்றது.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

குறிப்பாக, நிதியுதவி அளிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களின் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்து உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரித்து அரசுக்கு வழங்கி வருகின்றன.

MOST READ: புதிய ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் தள்ளி போகிறது.. உறுதி செய்த ஸ்கோடா...

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

இந்நிலையிலேயே, வைரசால் மிகக் கடுமையான வருமையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவும் விதமாக ஹூண்டாய் மற்றும் டைம்ளர் ஆகிய இரு நிறுவனங்களும் களமிறங்கியிருக்கின்றன.

குறிப்பாக, சென்னையைச் சுற்றியுள்ள மிகவும் ஏழ்மையான மக்களுக்கு உதவும் வகையில் அவை நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்காக, ஹூண்டாய் நிறுவனம், மளிகைப் பொருட்கள் அடங்கிய 1,000 பொட்டலங்களைத் தயார்படுத்தியுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

அவற்றை ஏழை மற்றும் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ், தொழில்துறை பாதுகாப்பு இணை இயக்குனர் எஸ் அனந்த், தமிழ்நாடு தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி. செந்தில்குமார் ஆகிய அதிகாரிகளிடம் அவற்றை ஹூண்டாய் வழங்கியுள்ளது.

முன்னதாக, இதேபோன்று கொரோனாவிற்கு எதிரான போரில் பங்களிக்கும் விதமாக மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அந்நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: ஹூண்டாய் வெனியூ பிஎஸ்6 டீசல் மைலேஜ் விபரம் வெளியானது!

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

இதுமட்டுமின்றி, கடந்த வாரம் தமிழக அரசுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக 5 கோடி ரூபாய் நிதியை ஹூண்டாய் ஒதுக்கியது. இவ்வாறு, கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு உதவிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே அத்தியாவசிய தேவைப் பொருட்களை ஏழை மற்றும் எளிய மக்களுக்கு கொடுத்து உதவியுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

இதைப் போன்றே டைம்ளர் நிறுவனமும் அதன் வர்த்தக வாகன பிரிவான டிஐசிவி மூலம் சில உதவிகளை வழங்க முன் வந்துள்ளது. இந்த பிரிவின்கீழ்தான் பாரத் பென்ஸ் பிராண்டை உருவாக்கி அந்நிறுவனம் கனரக வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. இந்த பிராண்டில் இருந்துதான் தற்போது பல அடுக்கு பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: மாருதி ஸ்விஃப்ட் காரின் வலது கரம்... ஃபியட் டீசல் எஞ்சின் விடைபெற்றது!

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

தொடர்ந்து, நிதியுதவி மட்டுமின்றி தன்னுடைய வேலையாட்கள் மற்றும் சென்னையை அடுத்துள்ள ஒரகடம் சுகாதார மையங்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர தனது கேன்டீன் மூலம் அக்கம் பக்கத்தில் கிராம மக்களுக்கு உணவு வழங்குதல், உள்ளூரில் சிக்கியிருந்த வெளிநாட்டு பயணிகளை விமான நிலையம் அழைத்து செல்லுதல் உள்ளிட்ட உதவிகளை அது செய்தது.

ஏழை எளிய மக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.. இந்த உதவியை நிச்சயம் தமிழகம் மறக்காது..

தொடர்ந்து, தனது பணியாட்களை வைத்து பொது இடங்களில் சமூக இடைவெளி மேற்கொள்ளும்படி அறிவுறுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் டைம்ளர் நிறுவனம் செய்தது. இதைத் தொடர்ந்து, தற்போது ரிமோட் வில்லேஜ் எனப்படும் தொடர்பே இல்லலாமல் நீண்ட தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை இந்நிறுவனம் செய்யவதற்கு முன் வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai & Daimler India Step Up CSR Initiatives. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X