புதிய ஹூண்டாய் கார்களை ஆன்லைனில் வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

வீட்டில் இருந்தடியே புதிய ஹூண்டாய் கார்களை ஆன்லைனில் புக்கிங் செய்து டெலிவிரி பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

கொரோனா பிரச்னை வாகன உற்பத்தி நிறுவனங்களையும், பெரும் முதலீடு செய்துள்ள டீலர்களின் வர்த்தகத்தை அடியோடு முடங்கச் செய்துள்ளது. இந்த சூழலில், வர்த்தகத்தை ஓரளவாவது செய்வதற்கான வாய்ப்புகளை கார் நிறுவனங்கள் தேடி வருகின்றன.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

அந்த வகையில், ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே கார் வாங்குவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. Click To Buy என்ற பெயரிலான இந்த திட்டத்தின் மூலமாக, ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலான கார் வாங்கும் நடைமுறைகள் இதன் மூலமாக மேற்கொள்ளப்படும்.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

கார் மாடலை தேர்வு செய்வது, அதன் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வது முதல் முன்பதிவு, முன்பணம் செலுத்துவது, கடன் திட்டம் மற்றும் டீலர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே மேற்கொள்ள முடியும்.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

காரின் வெளிப்புற வண்ணத் தேர்வு, உட்புற மாதிரி தேர்வு, கூடுதல் ஆக்சஸெரீகள் என அனைத்தையுமே இந்த நடைமுறையின் மூலமாக தேர்வு செய்தால், அவை அனைத்தும் சேர்க்கப்பட்ட நிலையில் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

கார் மாடலை தேர்வு செய்து முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தவுடன், வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக விற்பனை பிரதிநிதி மூலமாக மேலும் விளக்கங்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளை ஹூண்டாய் டீலர்கள் வாயிலாக செய்து தரப்படும்.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

முதற்கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்தியத்தில் சில டீலர்களில் இந்த நடைமுறை பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு இருந்ததுடன், வெற்றிகரமாகவும் அமைந்தது.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

இதையடுத்து, கடந்த சில மாதமாக சோதனை ஓட்டமாக இருந்த திட்டம் தற்போது கொரோனா பிரச்னையையடுத்து, உடனடியாக பெரும்பாலான ஹூண்டாய் டீலர்கள் இந்த ஆன்லைன் பிளாட்ஃபார்மில் இணைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தனது 500 டீலர்களை இந்த புதிய ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலமாக இணைத்துள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

இந்த திட்டத்தின் மூலமாக புதிய கார்களுக்கு விரைவான கடன் திட்ட நடைமுறையையும், முன் அனுமதிக்கப்பட்ட கடன் திட்டங்களையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, அனைத்தும் மிக மிக விரைவாகவும், எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது.

ஆன்லைனில் புதிய ஹூண்டாய் கார்களை வாங்கும் புதிய திட்டம் அறிமுகம்

கொரோனா பிரச்னையால் முடங்கி கிடக்கும் டீலர்களுக்கும், கார் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களை கவர இந்த ஆன்லைன் பிளாட்ஃபார்ம் மூலமாக ஓரளவு வர்த்தகம் நடக்க உதவியாக அமையும். இதே பாணியில் கார் வாங்கும் நடைமுறையை அண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai 'Click to Buy' online purchasing service launched across India by the company. The platform will also help with customer queries in real-time and for four-wheeler loan approvals.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X