சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

ஹூண்டாய் கிரெட்டா கார் போட்டியாளர்களை ஒரு கை பார்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல் வாகன தொழிற்சாலைகளும், டீலர்ஷிப்களும் மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், கடந்த மே 4ம் தேதியில் இருந்து அவை படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

பண புழக்கம் குறைவு உள்ளிட்ட காரணங்களால், கார் விற்பனை முன்பு போல தற்போது சிறப்பாக இல்லை என்றாலும், வரும் மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கடந்த மே மாதத்தில், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் சிறப்பாக விற்பனையான கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த மாடலாக புதிய ஹூண்டாய் கிரெட்டாதான் இருந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த மே மாதத்தில், 3,212 கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது. எனினும் கடந்த 2019ம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 65 சதவீத வீழ்ச்சியாகும்.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

ஏனெனில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 9,054 கிரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், இவ்வளவு பெரிய சரிவை ஹூண்டாய் கிரெட்டா சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் முதலிடத்தை கிரெட்டா பிடித்துள்ளது.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

இதற்கு அடுத்த இடத்தில் கியா செல்டோஸ் உள்ளது. கியா நிறுவனம் மொத்தம் 1,611 செல்டோஸ் கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. 713 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகிய கார்கள் உள்ளன.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

கடந்த மே மாதத்தில் மொத்தம் 672 எம்ஜி ஹெக்டர் கார்களும், 161 டாடா ஹாரியர் கார்களும் விற்பனையாகி உள்ளன. இந்த கார்கள்தான் டாப்-5 இடங்களில் உள்ளன. இதில், ஆச்சரியம் என்னவென்றால், இந்த நான்கு கார்களின் விற்பனையை எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக கூட்டினாலும் கூட, ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கையை மிஞ்ச முடியவில்லை.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

அதாவது ஹூண்டாய் கிரெட்டா தனி ஒரு காராக அதிக விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது. இந்திய மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டா உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில்தான் புதிய ஹூண்டாய் கிரெட்டா வெளியிடப்பட்டது.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

புதிய ஹூண்டாய் கிரெட்டா கார் தனது இரண்டாவது தலைமுறையில் பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது. இதில், புதிய க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள், புத்தம் புதிய கேபின் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. அத்துடன் கிரெட்டா காரில், அட்வான்ஸ்டு ப்ளூலிங்க் கனெக்ட்டிவிட்டி சிஸ்டத்துடன் 10 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

சூப்பரான மேட்டர்... போட்டியாளர்களை ஒரு கை பார்த்த ஹூண்டாய் கிரெட்டா... என்னனு தெரியுமா?

இதுதவிர டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் 7.0 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுண்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல்வேறு வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் வழங்கி இருக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்யும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக கிரெட்டா சிறப்பு பெற்றுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Creta, Kia Seltos, Mahindra Scorpio, MG Hector, Tata Harrier - Midsize SUVs May 2020 Sales Report. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X