கொரோனாவுக்கு இடையிலும் விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

கொரோனா பிரச்னையால் இயல்பு நிலை முழுமையாக திரும்ப முடியாத நிலையில், விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விஸ்வரூபம் எடுத்துள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி மாடலாக மாறியது. கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு போட்டியாளர்களுக்கு கடும் சவாலை தந்தது.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

மேலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தலைமுறை மாடலாக ஹூண்டாய் க்ரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் பல்வேறு மாறுதல்கள் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் களமிறக்கப்பட்டது.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

இதனால், எஸ்யூவி பிரியர்களின் கவனம் மீண்டும் ஹூண்டாய் க்ரெட்டா பக்கம் திரும்பியது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய இரண்டு மாடல்களும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், கியா செல்டோஸ் காரைவிட சில விஷயங்களில் ஹூண்டாய் க்ரெட்டா மதிப்பு வாய்ந்த தேர்வாக மாறியது.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

மேலும், லாக்டவுன் காலத்திலும் வாடிக்கையாளர்கள் எளிதாக ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கும் வாய்ப்பையும் ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. இதற்கு போதிய பலன் கிடைத்துள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு தொடர்ந்து முன்பதிவு குவிந்தது. மேலும், கியா செல்டோஸ் காருக்கும் அதிக வரவேற்பு இருந்தபோதிலும், ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை மீண்டும் நம்பர்-1 இடத்திற்கு வந்தது.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

கடந்த மாதம் 11,529 ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில், இது நிச்சயம் இமாலய விற்பனையாகவே கருத முடியும். கியா செல்டோஸ் காரும் சளைத்தது அல்ல என்பதும் தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் 8,270 கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

எனினும், மிக அதிக வித்தியாசத்தில் நம்பர்-1 இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா இடம்பிடித்துள்ளது. இரண்டு கார்களும் டிசைனில் வேறுபடுகின்றன. ஆனால், எஞ்சின் தேர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

இந்த இரண்டு கார்களிலும், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கின்றன.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு நேரடி இணைய வசதி, ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இணைக்கும் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இரண்டு மாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.

அட்ராசக்கை... விற்பனையில் விஸ்வரூபம் எடுத்த ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையிலும், கியா செல்டோஸ் எஸ்யூவி ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கிறது. எஸ்யூவி மார்க்கெட்டில் க்ரெட்டா எஸ்யூவி தொடர்ந்து மிக வலுவான நிலையில் உள்ளது. மேலும், இதுவரை 55,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதால், சென்னை ஆலையில் உற்பத்திப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

Most Read Articles

English summary
The mid-size SUV rivalry continues as the Hyundai Creta outsells the Kia Seltos for the third month in the Indian market. Both South-Korean SUVs are similar in terms of features and powertrain options.
Story first published: Thursday, August 6, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X