ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

ஹூண்டாய் க்ரெட்டா மாடல் கடந்த ஐந்து வருட விற்பனையில் 0.5 மில்லியன் என்ற மைல்கல்லை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்பை பெற்றுவந்த சாண்ட்ரோ மாடலின் தாக்கம் எப்போது குறைய ஆரம்பித்ததோ அப்போது அந்த சூழ்நிலையை சரியான முறையில் கையாண்ட தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2015ல் க்ரெட்டாவை முதன்முதலாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

இதனால் சாண்ட்ரோவிற்கு மாற்று எஸ்யூவி காரை விரும்பியவர்களின் முதன்மையான தேர்வுகளுள் ஒன்றாக க்ரெட்டா மாறியது. அறிமுகமானதில் இருந்தே வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுவரும் இந்த எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகமானது.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

சரியாக இந்தியாவில் ஊரடங்கு உததரவு அமலுக்கு வந்த சமயத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ஹூண்டாய் நிறுவனத்தை க்ரெட்டா தான் காப்பாற்றி வருகிறது என்றால் அது மிகையில்லை. பல தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினை கொண்டுள்ள இந்த எஸ்யூவி காருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

இந்த இரு என்ஜின்களுக்கும் ட்ரான்ஸ்மிஷனிற்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படுகிறது. இவற்றுடன் 2020ஆம் ஆண்டிற்காக சில தோற்ற மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக க்ரெட்டா கொண்டுவரப்பட்டுள்ளதால் தான் தற்போது 5 லட்ச மாதிரி கார்கள் விற்பனை என்ற சாதனையை இந்த மாடலால் எளிதாக இந்திய சந்தையில் அடைய முடிந்துள்ளது.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

இயக்க ஆற்றலிற்காக இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும், 1.4 லிட்டர் கப்பா டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

இதன் 2020 வெர்சனின் கேபின் முற்றிலும் புத்துணர்ச்சியாக கியா செல்டோஸிற்கு சரியான போட்டியினை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாயின் போஸ்ட்-சேல்ஸ் சேவை தான் க்ரெட்டாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

ஹூண்டாயின் ஹீரோவாக க்ரெட்டா எஸ்யூவி... 5 வருடத்தில் 5 லட்ச மாதிரிகள் விற்பனை...

500,000 என்ற விற்பனையுடன் க்ரெட்டா ஆட்டோமொபைல் துறையில் மற்றொரு சாதனையை புரிந்துள்ளது. இதன் மூலம் எஸ்யூவி பிரிவில் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Creta 500000 Lakh Customers Since First Time Launch
Story first published: Tuesday, August 11, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X