Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா 93 காலமானார்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தம் புதிய காரை திருட ஹூண்டாய் முன்னாள் ஊழியர் போட்ட செம்ம ஸ்கெட்ச்! இப்படியும் திருடுவாங்களா?
ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் புதிய காரை திருட கையாண்ட யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் காவல்துறைக்கு தலை வலியை ஏற்படுத்தும் வகையில் வாகன திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதிலும், சமீபகாலமாக நமது செவிக்கு வரும் செய்திகள் அனைத்தும், நாம் இதுவரை அறிந்திராத வகையிலான, விநோத திருட்டு சம்பவங்களாகவே இருக்கின்றன.

அந்தவகையில் நாட்டையே உலுக்குகின்ற வகையிலான எம்பிஏ பட்டதாரிகளின் மாறுபட்ட திருட்டு யுக்தி அமைந்திருந்தது. விபத்தில் சிக்கி முற்றிலும் பயனற்றதாக மாறும் வாகனங்களைத் தேடிப்பிடிக்கும் இந்த கும்பல், அதன் ஆவணங்களை வாகனத்தின் உரிமையாளரிடம் இருந்தே மிக் குறைந்த விலையில் பெற்று, அந்த ஆவணத்திற்கு ஏற்ற கார்களைத் திருடி பயன்படுத்திய கார்கள் சந்தையில் விற்றிருக்கின்றனர்.

வாகனத்தின் உரிமையாளரே நேரில் வந்தால்கூட அக்காரை கண்டுபிடிக்க முடியாத வகையில் பதிவு எண் முதல் அனைத்தையும் மிகவும் நேர்த்தியாக மாற்றி அதன் பின்னரே செகண்ட் ஹேண்ட் கார்கல் சந்தையில் அவர் விற்றிருக்கின்றனர்.

எம்பிஏ பட்டதாரிகளின் இந்த திருட்டுக்கு ஒரு சில காப்பீட்டு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகளும் உடந்தை எனக் கூறப்படுகின்றது. இவர்களின் மூலமே விபத்தில் சிக்கிய கார்களின் ஆவணங்களை மிகவும் குறைந்த விலையில், அதன் உரிமையாளர்களிடம் இருந்து அவர்கள் பெற்று வந்தனர்.

இந்நிலையில், மற்றுமொரு விநோதமான திருட்டு சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. அது, நாட்டின் தலைநகரான புது டெல்லியில் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையத்தில் பணி புரிந்த நபர் சிக்கியிருப்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி போலீஸாருக்கே ஷாக்களிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஆம், ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரே தற்போதைய கார் திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார். இவர் எப்படி புத்தம் புதிய ஹூண்டாய் க்ரெட்டா காரை திருடினார் என்பது பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

திருடர் என மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ள அந்த மர்ம நபர், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி எனும் பகுதியில் உள்ள ஹூண்டாய் சர்வீஸ் மையத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர், அண்மையில்தான் இந்த பணியில் இருந்து விடைப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

முன்னர், பணியில் இருந்த வரை நிர்வாகத்திற்கு தெரியாமல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களை மட்டும் தொடர்பு கொண்டு அவர்களிடம் நெறுங்கி பழகி வந்துள்ளார் அந்த நபர். இந்த பழக்கத்தையேக் காரணமாகக் காட்டி குறைந்த செலவில் சர்வீஸ் மற்றும் பிற சேவைகளை அவர்களுக்கு மட்டும் வழங்கி வந்திருக்கின்றார்.

இந்த நேரத்தில்தான் தனக்கு தேவையான சில விசித்திரமான செயல் முறைகளையும் அக்கார்களில் அரங்கேற்றியிருக்கின்றார் அந்த மர்ம நபர். அதாவது, காரின் திருட்டைத் தடுக்குகின்ற பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்கும் காரியங்களை அவர் செய்திருக்கின்றார்.

இதைத்தொடர்ந்தே, காரின் உரிமையாளருக்கே தெரியாமல் அவரை நோட்டமிட்டு, அக்கார் எங்கு எல்லாம் பயணிக்கின்றது, எந்த இடத்தில் நிறுத்தப்படுகின்றது என அனைத்து தகவலையும் அவர் சேகரித்து வந்துள்ளார். இதன்பின்னரே, ஏற்கனவே செய்து வைத்த சூழ்ச்சியை செயல்படுத்தி அக்காரை யாருக்கும் தெரியாமல் லாவமாக திருடி வந்துள்ளார்.

இவ்வாறு, ஜஹாங்கிர்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த க்ரெட்டா எஸ்யூவி காரையும் அந்த நபர் திருடியிருக்கின்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக காவலர்களின் உடனடி நடவடிக்கை மற்றும் சிசிடிவி போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அவர் சிக்கியிருக்கின்றார்.

முன்னாள் ஹூண்டாய் சர்வீஸ் மைய ஊழியரின் இந்த விநோதமான திருட்டு யுக்தி வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோர பழுதுநீக்கம் கடையில் வாகனத்தை விட்டால், ஒரிஜினல் பாகங்கள் களவு செய்யப்படுகின்றது என்ற அச்சத்தில்தான் பலர் கூடுதல் செலவாகினாலும் பரவாயில்லை என அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் வாகனங்களை விட்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய டெல்லி சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. எனவே, வாகன உரிமையாளர்கள் எந்த இடத்தில் வாகனத்தை சர்வீஸ் செய்தாலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகின்றது.