மொத்தம் 14 வேரியண்ட் & 10 நிறத்தேர்வுகளில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

வருகிற மார்ச் 17ஆம் தேதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா மாடலின் புதிய தலைமுறை காரில் வழங்கப்படவுள்ள வேரியண்ட்கள் குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

இதுகுறித்து கசிந்துள்ள புகைப்படத்தில் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளை பெற்றவுள்ளது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

ஹூண்டாய் க்ரெட்டாவின் பழைய என்ஜின் தேர்வுகளுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் நிலையாக இணைக்கப்படவுள்ளது. 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை பெறவுள்ளது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

மற்ற இரு 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் சிவிடி மற்றும் டார்க் கன்வெர்டர் யூனிட் தேர்வுகளுடன் டீலர்ஷிப்களில் கிடைக்கும். மேலும் இந்த புகைப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவலின் மூலம் 2020 ஹூண்டாய் க்ரெட்டா ஐந்து விதமான ட்ரிம் தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது தெரிய வருகிறது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

E, EX, S, SX மற்றும் SX (O) போன்றவை இந்த புதிய மாடலின் ஐந்து ட்ரிம் தேர்வுகளாகும். இதில் SX ட்ரிம் அனைத்து விதமான என்ஜின் தேர்வுகளையும் பெறவுள்ளது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

இவை மட்டுமின்றி இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா எட்டு சிங்கிள்-டோன் மற்றும் இரண்டு ட்யூல்-டோன் உள்ளிட்ட நிறத்தேர்வுகளிலும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

இதில் சிங்கிள் டோனில் மல்பெரி ரெட், கேலக்ஸி ப்ளூ, போலார் வெள்ளை, டைப்பூன் சில்வர், டைட்டன் க்ரே, பாண்டோம் ப்ளாக் மற்றும் லாவா ஆரஞ்ச் உள்ளிட்ட நிறங்கள் உள்ளன. ட்யூல்-டோன் தேர்வில் போலார் வெள்ளை-ப்ளாக் சன்ரூஃப் மற்றும் லாவா ஆரஞ்ச்- ப்ளாக் சன்ரூஃப் உள்ளிட்டவை அடங்கும்.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐஎக்ஸ்25 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் ஹூண்டாய் க்ரெட்டாவின் இந்த புதிய தலைமுறை காரில் எல்இடி தரத்தில் பிளவுப்பட்ட ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில்லைட்ஸ், புதிய 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் கார்னிஷிங் செய்யப்பட்ட பக்கவாட்டு ஜன்னல்கள் உள்ளிட்டவற்றை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

அதேபோல் உட்புறத்தில் பனோராமிக் சன்ரூஃப், முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் ப்ளூலிங்க் இணைப்பை பெற்றிருக்கும் என நம்பலாம். இவற்றுடன் 2020 ஹூண்டாய் சொனெட்டோ மற்றும் இந்நிறுவனத்தின் புதிய தனித்துவமான மாடலான ஹூண்டாய் கிராண்டேயூர் உள்ளிட்ட மாடல்களில் காணப்பட்ட பல-செயல்பாடுகள் ஸ்டேரிங் சக்கரத்தையும் இந்த புதிய கார் பெறவுள்ளது.

மொத்தம் 14 வேரியண்ட்களில் அறிமுகமாகும் 2020 ஹூண்டாய் க்ரெட்டா...!

2020 ஹூண்டாய் க்ரெட்டா இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.10 லிருந்து ரூ.17 லட்சம் வரையிலான விலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலுக்கு முக்கியமான போட்டி மாடல்களாக எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், டாடா ஹெரியர் உள்ளிட்ட மாடல்கள் பார்க்கப்படுகின்றன.

Source: Rushlane

Most Read Articles
English summary
2020 Hyundai Creta 14 variants, 10 colour options detailed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X