விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

கோனா எலெக்ட்ரிக் காரைவிட விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹூண்டாய் நிறுவனம் கோனா என்ற தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடைல இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.23.70 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த கார் பெரும் வரேவற்பை பெற்றிருக்கிறது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

இந்த காருக்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிய ஏமாற்றம் இருந்து வருகிறது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

இந்த நிலையில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை குறிவைத்து எம்ஜி இசட்எஸ், டாடா நெக்ஸான் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வந்துவிட்டன. இதனால், ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

இதுதொடர்பாக ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு ஹூண்டாய் நிர்வாக இயக்குனர் சியோன் சியோப் கிம் பேட்டி அளித்துள்ளார். அதில், விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவுக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

இந்த மாடலானது இந்தியர்களுக்கு தோதுவான விலையில் இருக்கும். இது இந்தியாவுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் கூற முடியும்.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான திட்டமும் உள்ளது, " என்று கிம் தெரிவித்துள்ளார்.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 முதல் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

அதாவது, டாடா நெக்ஸான், மஹிந்திரா அறிமுகப்படுத்த இருக்கும் எக்ஸ்யூவி300 கார்களுக்கு போட்டியானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்குள் இந்த புதிய மாடலுக்கு விலை நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய்!

இந்த புதிய ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் 2022ம் ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா கார் போன்றே, இந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கும் பெரிய அளவிலான வரவேற்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

குறிப்பு: மாதிரிக்காக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
South Korean carmaker, Hyundai Motor is working on an affordable new electric car model for the Indian market.
Story first published: Tuesday, March 17, 2020, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X