ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2020 எலண்ட்ரா மாடலின் புதிய பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஹூண்டாய் நிறுவனம் எலண்ட்ராவின் இந்த பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டின் மூலமாக தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அப்டேட் செய்துள்ளது. புதிய எலண்ட்ரா டீசல் மாடல் எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஒ) என்ற இரு விதமான வேரியண்ட்களில் வழங்கப்படவுள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

எலண்ட்ரா டீசல் மாடலில் 1.5 லிட்டர் யூ2 டீசல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 112 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கவல்லது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஹூண்டாய் எலண்ட்ரா மாடலின் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டின் விலை இதுவரை வெளியிடப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை இந்த டீசல் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை, தற்சமயம் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

டீசல் என்ஜினின் பிஎஸ்6 அப்டேட்டை தவிர்த்து புதிய ஹூண்டாய் எலண்ட்ரா மாடலில் வேறெந்த காஸ்மெட்டிக் மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில் எலண்ட்ரா மாடலில் ஏற்கனவே அதிக அளவில் வசதிகளை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இந்த வகையில் இந்த கார் இதன் பிரிவில் முதல் மாடலாக சில அம்சங்களை பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம் எலண்ட்ரா மாடலில் லேட்டஸ்ட் ப்ளூலிங்க் இணைப்பு தொழிற்நுட்பத்தையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இதற்கிடையில், எலண்ட்ரா செடான் மாடலின் அடுத்த தலைமுறை காரை ஹூண்டாய் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு உலகளாவிய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தது. இந்த புதிய தலைமுறை எலண்ட்ரா மாடல் இந்திய சந்தைக்கு அடுத்த ஆண்டில் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஹூண்டாய் நிறுவனம் இந்த அடுத்த தலைமுறை காரை ஹைப்ரீட் வேரியண்ட்டிலும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த ஹைப்ரீட் எலண்ட்ரா மாடலை இந்திய சந்தைக்கு இந்நிறுவனம் இன்னும் சில வருடங்களுக்கு கொண்டுவராது என்றே தெரிகிறது.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இந்த புதிய அறிமுகங்களுக்கு இடையே தற்சமயம் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் முதலமைச்சரின் நிவாரண நிதியில் தனது பங்கிற்கு ரூ.5 கோடியை வழங்கியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஹூண்டாய் எலண்ட்ரா டீசல் மாடல் முழுவதும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து கடைசியாக பிஎஸ்6 அப்டேட்டை பெற்றுள்ள இந்த டீசல் காரின் விலை இந்நிறுவனத்தின் இணையத்தள பக்கத்தில் எங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Hyundai Elantra Diesel BS6 Specifications & Updates Revealed: Prices To Be Announced Post Lockdown
Story first published: Monday, April 13, 2020, 21:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X