ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ்ஷோரூமில் ரூ.6.63 லட்சத்தை விலையாக பெற்றுள்ள இந்த புதிய சிஎன்ஜி மாடல் இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

இந்த இரு வேரியண்ட்களாக மிட்-ஸ்பெக் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டவை உள்ளன. விலையை பொறுத்தவரையில் க்ராண்ட் ஐ10 நியோஸின் இந்த சிஎன்ஜி ட்ரிம் சரியாக இதன் பெட்ரோல் மற்றும் டீசல் ட்ரிம்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

அதேநேரம் இந்த சிஎன்ஜி வேரியண்ட், இதன் எரிபொருள் என்ஜின் வேரியண்ட்களை காட்டிலும் அப்டேட்டான வசதிகளையும், தொழிற்நுட்பங்களையும் பெற்றுள்ளது. இந்த வகையில் ஐ10 க்ராண்ட் நியோஸ் சிஎன்ஜி மாடல் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

இதுமட்டுமின்றி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் ஆடியோ கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் போன்ற வசதிகளையும் ஹூண்டாய் நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இருப்பினும் சில தொழிற்நுட்ப அம்சங்களை இந்த கார் இழந்துள்ளது.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

இதில் கூல்டு க்ளோவ் கம்பார்ட்மெண்ட்ஸ், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட், பின்புற வாஷர் மற்றும் வைபர் உள்ளிட்டவை அடங்கும். ஆனால் பாதுகாப்பு அம்சங்களில் இந்த காரில் எந்த குறைப்பாடும் இல்லை. இந்த ஹேட்ச்பேக் மாடலில் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார், ஹை-ஸ்பீடு வார்னிங் மற்றும் சீட்-பெல்ட்டை நினைவூட்டும் வசதி போன்றவை உள்ளன.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

இயக்க ஆற்றலுக்கு க்ராண்ட் ஐ10 நியோஸ் சிஎன்ஜி மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் கப்பா என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 66 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

இந்த காரின் பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றலை விட இந்த சிஎன்ஜி என்ஜினின் ஆற்றல் 10 பிஎச்பி மற்றும் 19 என்எம் டார்க் திறன் குறைவாகும். ட்ரான்ஸ்மிஷனிற்கு இந்த சிஎன்ஜி மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இந்த காரில் வழங்கப்படவில்லை.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

ஹேட்ச்பேக் பிரிவில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடல் மட்டும் தான் சிஎன்ஜி வேரியண்ட்டை பெற்றுள்ளது. இந்த ஹேட்ச்பேக் காருக்கு போட்டியாக சந்தையில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், டாடா டியாகோ மற்றும் ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் காரின் புதிய சிஎன்ஜி வேரியண்ட் ரூ.6.63 லட்சத்தில் அறிமுகம்...!

ஹூண்டாய் ஐ10 க்ராண்ட் நியோஸ் மாடலின் மூன்றாம் தலைமுறை கார் தான் தற்சமயம் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காரின் விற்பனை ஏற்கனவே சந்தையில் சிறப்பாக உள்ள நிலையில் தற்போது இந்த புதிய சிஎன்ஜி வேரியண்ட் நிச்சயம் இதன் விற்பனையை அதிகரிக்கும்.

Most Read Articles
English summary
Hyundai i10 Grand NIOS CNG Launched In India: Prices Start At Rs 6.63 Lakh
Story first published: Thursday, April 16, 2020, 19:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X