1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐ30 மாடல் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தபோது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை இந்த சோதனையை ARAI அமைப்பு நடத்தியுள்ளது.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

ஹூண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலான ஐ30, தற்சமயம் வெவ்வேறு விதமான இந்திய சாலைகளில் தொடர் சோதனை ஓட்டங்களில் மட்டும் தான் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காரில் இந்நிறுவனத்தின் எதிர்கால மாடல்களில் வழங்கப்படவுள்ள என்ஜின் பொருத்தப்பட உள்ளது.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

தற்போதைய சோதனை ஓட்ட ஸ்பை புகைப்படங்கள் இந்த கார் ARAI அமைப்பின் மூலமாக சோதனையில் ஈடுப்பட்டிருப்பதை வெளிக்காட்டுகின்றன. இதன்மூலம் புதிய ஹூண்டாய் ஐ30 மாடல் ஒத்திசைவு செயல்முறைகளில் உட்படுத்தப்பட்டு வருவது தெரிய வருகிறது. இதனால் இந்த ஹூண்டாய் மாடலின் அறிமுகத்தை விரைவில் இந்தியாவில் பார்க்கலாம்.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

இருப்பினும் இந்த ஐ30 காரின் இந்திய அறிமுகம் குறித்த எந்த தகவலும் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து இதுவரை வெளிவரவில்லை. தென்கொரியாவை சேர்ந்த இந்நிறுவனம் சமீபத்தில் தான் 2020 ஐ20 ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

அளவில் பெரியதான ஐ30 மாடல் அறிமுகமான பிறகு இந்திய சந்தையில் எந்த காருடனும் நேரடியாக போட்டியிட போவதில்லை. புதிய ஹூண்டாய் க்ரெட்டா மாடலுக்கு நிகராக எக்ஸ்ஷோரூமில் ரூ.10-12 லட்சத்தை விலையாக புதிய ஐ30 மாடல் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்பு மாடலாக ஐ30 விளங்கினாலும், மேற்கூறப்பட்ட எக்ஸ்ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் க்ராஸ்ஓவர் ரக மாடல்களை தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதனால் இந்த விலை ரேஞ்ச்சில் ஹூண்டாய் ஐ30 மாடலுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக இப்போதைக்கு தெரியவில்லை.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

ஐரோப்பாவில் ஐ30 மாடலுக்கு ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், பியூஜியோட் 308, ஸ்கோடா ஸ்காலா உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட்டு வருகிறது. ஆனால் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை இந்தியாவில் விலையுயர்ந்த ஹேட்ச்பேக்கின் பிரிவில் நிலைநிறுத்தவுள்ளது. வழக்கமான என்ஜின் அமைப்புடன் ஐ30 மாடல் இந்த பிரிவில் எவ்வாறு செயல்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

ARAI அமைப்பால் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் ஐ30 மாடலில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பது காரின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்ஜ்ஜின் மூலமாக தெரிய வருகிறது. இந்த 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 115 பிஎச்பி மற்றும் 136 பிஎச்பி என்ற இரு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளது.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. ஐரோப்பாவில் இந்த காருக்கு இந்த டீசல் என்ஜின் உடன் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் உள்ளிட்ட என்ஜின் தேர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

1.6 லி டீசல் என்ஜினுடன் ஹூண்டாய் ஐ30 ஹேட்ச்பேக் மாடல் சோதனை... ARAI அமைப்பு நடத்தியது...

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இதன் ஸ்பை புகைப்படங்களுக்கு பிறகாவது ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ30 மாடலின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது முக்கியமான குறிப்புகளையோ வெளியிடுகிறதா என்பதை பார்ப்போம்.

Source: Rushlane

Most Read Articles
English summary
Hyundai i30 1.6L diesel spied on test by ARAI
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X