சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

சுதந்திர தினத்த்தை கொண்டாடும் இவ்வேளையில், கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பல சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ஹூண்டாய் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

கொரோனா ஏற்படுத்திய பெரும் இழப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு வரும் பண்டிகை காலம் உதவும் என்று கார் நிறுவனங்கள் முஸ்தீபுடன் களமாற்ற துவங்கி இருக்கின்றன. மேலும், சுதந்திர கொண்டாட்டம் மற்றும் விரைவில் பண்டிகை காலம் துவங்க இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்கான பல்வேறு சிறப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

அந்த வகையில், ஹூண்டாய் கார் நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த காருக்கு எவ்வளவு சலுகைகளை அதிகபட்சமாக பெற முடியும் என்ற விபரங்களை தொடர்ந்து காணலாம்.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.45,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்குரூ.25,000 வரையிலும், அவ்ரா செடான் காருக்கு ரூ.20,000 வரையிலும் சேமிப்புச் சலுகைகளை பெறக்கூடிய வாய்ப்புள்ளது. இதேபோன்று, க்ராண்ட் ஐ10 காருக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

ஹூண்டாய் எலைட் ஐ20 பிரிமீயம் ஹேட்ச்பேக் காருக்கு ரூ.35,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதேபோன்று, எலான்ட்ரா காருக்கு ரூ.30,000 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

இதுதவிர்த்து, 3 ஆண்டுகளுக்கு வரம்பில்லா கிலோமீட்டருக்கான வாரண்டி, சாலை அவசர உதவித் திட்டம் உள்ளிட்டவற்றின் சிறப்பு திட்டங்களும் கார்ப்பரேட் பணியாளர்கள், டாக்டர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

மேலும், சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் மாடல்களுக்கு சிறப்பு நிதி திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களின் கீழ் 60 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் மாதத் தவணைகள் கொடுக்கப்படுவதுடன், முதல் சில மாதங்களுக்கு மாதத் தவணை விலக்கு பெறும் கடன் திட்டங்களும் உள்ளன.

சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்!

வரும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ஹூண்டாய் அறிவித்துள்ள இந்த சிறப்புச் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது முன்பதிவு செய்பவர்கள் வரும் பண்டிகை காலத்தில் காரை டெலிவிரி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Hyundai India has announced various benefits, discounts and special offers on multiple models for the month of August 2020. The discounts and benefits are part of the brand's strategy to boost sales in the Indian market, around the independence day period. These special offers and benefits will be available until the 31st of August 2020.
Story first published: Thursday, August 13, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X