டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

நாடு முழுவதும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்பு ஹூண்டாய் மோட்டார்ஸின் முதல் இந்திய அறிமுக மாடலாக டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் இருக்கும் என்று இந்நிறுவனத்தின் வணிக தலைவர் தருண் கார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

தருண் கார்க் இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் #LivewithAutocar என்ற ஹாஸ்டேக்கிங் மூலமாக வாடிக்கையாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். வெளிப்புற மற்றும் உட்புறத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வெளிவரவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் அப்கிரேட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

இருப்பினும் மொத்த தோற்ற அடிப்படையில் தற்போதைய டக்ஸன் மாடலை தான் பெரும்பான்மையாக ஒத்து காணப்படுகின்ற இந்த காரில் என்ஜின் அமைப்பாக பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி பவரையும், 192 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுவே 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-டீசல் என்ஜின் 182 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கவல்லது.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

பெட்ரோல் என்ஜின் உடன் வழக்கமான 6-ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸும், டீசல் என்ஜின் உடன் புதிய 8-ஸ்பீடு யூனிட்டும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்படவுள்ளது. இதன் டாப் ஜிஎல்எஸ் டீசல் ட்ரிம் மட்டும் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

முன்புறத்தில் மிக பெரிய டிசைன் மாற்றங்களாக புதிய காஸ்கேடிங் க்ரில், ஹெட்லைட்ஸ், டெயில்-லைட்ஸ் மற்றும் முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த மாற்றங்களை தவிர்த்து பார்த்தோமேயானால், இந்த எஸ்யூவியின் மொத்த தோற்றமும் கிட்டத்தட்ட தற்போதைய டக்ஸன் மாடலை தான் ஒத்து காணப்படுகிறது.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்திலும் சில அப்டேட்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதில் மிகவும் கவனிக்கத்தக்கதாக புதிய டேஸ்போர்டு டிசைன், ஹூண்டாயின் ப்ளூ லிங்க் இணைப்பு வசதிகளை கொண்ட 8.0 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

இவை மட்டுமின்றி கூடுதலாக வயர்லெஸ் சார்ஜர்கள், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் எலக்ட்ரிக் முன்புற-பயணி இருக்கை அட்ஜெஸ்ட்மெண்ட்டையும் இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டுள்ளது. ஜிஎல் மற்றும் ஜிஎல்எஸ் என்ற இரு விதமான ட்ரிம் நிலைகளில் அறிமுகமாகும் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை தற்போதைய தலைமுறை காரை காட்டிலும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..!

இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு முதன்முதலாக காட்சியளித்த ஹூண்டாயின் இந்த புதிய எஸ்யூவி மாடலுக்கு ஜீப் காம்பஸ் மற்றும் ஹோண்டா சிஆர்-வி போன்ற மாடல்கள் விற்பனையில் போட்டியாக விளங்கும்.

Most Read Articles
English summary
Hyundai India confirmed that tucson facelift is on track
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X