ஹூண்டாய் கோனா மின்சார கார்ல இவ்ளோ லாபமா?.. ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட உரிமையாளர்..! நம்பவே முடியல!

கோனா மின்சார காரைப் பயன்படுத்தி வரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய முதலாமாண்டு சர்வீஸ் கட்டணம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை தொடர்ந்து காணலாம்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இந்திய மின்வாகன சந்தையில் கால் தடம் பதிக்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம், கோனா எனும் மின்சார காரை களமிறக்கியது. இந்த காரே ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார காராகும். தற்போது மின்சார மாடலில் பல்வேறு தேர்வுகள் இந்தியாவில் கிடைத்து வந்தாலும், முதலில் இந்தியர்களைப் பரவசமூட்டும் வகையில் அறிமுகமாகியது கோனா மட்டுமே. எனவே, இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

ஆனால், இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக எம்ஜி நிறுவனம், அதன் இசட்எஸ் மின்சார காரையும், டாடா நிறுவனம் நெக்ஸான் மாடலிலும் மின்சார கார்களை களமிறக்கின. இருப்பினும், ஹூண்டாய் நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் பலர் அந்நிறுவனத்தின் கோனா மின்சார காருக்கு எப்போதும்போல் கணிசமான வரவேற்பை தற்போதும் வழங்கி வருகின்றனர்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இருப்பினும், இக்காரின் விற்பனைப் பெரியளவில் சூடுபிடிக்காத நிலையிலேயேக் காணப்படுகின்றது. இதற்கு காரின் அதிக விலை முக்கிய காரணமாக தெரிந்தாலும், மின் வாகனங்களுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே மிக மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. எனவேதான், எரிபொருள் வாகனங்களுக்கு இணையான விற்பனையைப் பெற முடியாமல் மின் வாகனங்கள் தவித்து வருகின்றன.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இந்நிலையில்தான் மின்சார வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக ஓர் தகவல் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. அதாவது, ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மின்சார காரை பயன்படுத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது ஒரு வருட சர்வீஸ் (பராமரிப்பு) செலவு பற்றிய தகவலை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். அதில், அவர் அதிகபட்சமாக ரூ. 1,043 மட்டுமே செலவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

அதாவது, வருடம் முழுவதும் பராமரித்ததற்கான சர்வீஸ் கட்டணமாக, அவர் செலவு செய்த ஒட்டுமொத்த தொகையே ரூ. 1,043 மட்டும்தான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலை அருண் பாத் (@arunbhats) எனும் நபரே அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசித்து வரும் இந்த இளைஞர், டிரிடெண்ட் ஆட்டோமொபைல்ஸ் வாயிலாகவே தனது ஹூண்டாய் கோனா மின்சார காரை பரமாரித்து வந்துள்ளார்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இங்குதான் வருட பராமரிப்பு செலவாக ரூ. 1,043 மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டு மெய் மறந்துபோன அருண், இதுகுறித்த தகவலை பிறருக்கும் தெரியப்படுத்தும் விதமாக புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு வருடத்திற்கான கட்டாய பராமரிப்பு கட்டணம் ரூ. 500 என்பது தெரியவந்துள்ளது. இதேபோல், மீத தொகை அனைத்தும் பழுது நீக்கம் மற்றும் பாகம் மாற்றியதற்காக வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இதன்படி, பஞ்சர் சீர் செய்யப்பட்டது, கேலிபர் கைட்களுக்கு கிரீஸ் சேர்த்தது, காரை சானிட்டைஸ் (தூய்மைப்படுத்தல்) செய்தது மற்றும் பிற வழக்கமான பரிசோதனைக்களுக்காக ரூ. 543 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தை பராமரிப்பின்போது அருண் பூஜ்ஜிய கட்டணத்தை செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், அவர் இதுவரை செலுத்தியதிலேயே தற்போதைய 1,043 ரூபாய்தான் அதிக கட்டணம் என தெரிவித்துள்ளார்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

ஹூண்டாய் நிறுவனம் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை பூஜ்ஜியம் கட்டணம் அடிப்படையில் பராமரிப்பினை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், முந்தைய காலங்களில் அருண் ஒரு பைசாகூட செலவில்லாமல் பராமரித்து வந்திருக்கின்றார்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

மின்சார வாகனங்கள் குறைந்த தேய்மானம் திறனைக் கொண்டிருப்பதே இந்தளவிற்கு குறைந்த தொகை செலவாகியிருப்பதற்கு காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த கூறுகளைக் கொண்டே மின்சார வாகனங்கள் இயங்குகின்றன. எனவேதான் இதைப் பராமரிப்பது மிக சுலபமாக இருக்கின்றது.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் அதிக சிறப்பம்சங்களைக் கொண்ட காராக இருப்பதால் அதன் விலையும் உயர்வாகவே உள்ளது. இக்கார் இந்திய மதிப்பில் ரூ. 25.30 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடில் இது விலையைக் கொண்டிருக்கும்.

ஒரு வருட சேவை செலவு ரூ. 1,043 மட்டுமே... ஆதாரத்துடன் தகவல் வெளியிட்ட கோனா உரிமையாளர்... ஆச்சரியத்தில் மக்கள்!

இக்காரில் 39.2kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான சார்ஜில் 452 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். மேலும், கோனா மின்சார காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 134 பிஎச்பி மற்றும் 395 என்எம் -ஐ வெளிப்படுத்தும். இதேகார் உலக சந்தையில் கூடுதல் திறனில் விற்பனைச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Hyundai Kona 1 Year Service Cost. Read In Tamil.
Story first published: Wednesday, August 5, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X