வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

வெறும் 250 ரூபாய் செலவில் பெங்களூரிலிருந்து கோவைக்கு சென்று அசத்தி இருக்கிறது ஹூண்டாய் கோனா கார். மேலும், நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் நிரூபித்துள்ளது. இதுபற்றி விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

பெட்ரோல், டீசல் கார்களைவிட்டு எலெக்ட்ரிக் கார் பக்கம் வாடிக்கையாளர்கள் மெல்ல கவனத்தை திருப்பி உள்ளனர். விலை அதிகம் உள்ளிட்ட பாதகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், பெட்ரோல், டீசல் கார்களை போல எலெக்ட்ரிக் கார்களை எடுத்துக் கொண்டு வெளியூர் மற்றும் நீண்ட தூரம் செல்ல முடியாது என்பதே பலரும் தயங்கும் விஷயம்!

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த பேட்டரியை பெற்றிருக்கும் முதல் கார் மாடலாக வந்துள்ளது. வாடிக்கையாளர் மத்தியிலும் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றது.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அராய் சான்றுபடி, இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், நடைமுறையில் இது சாத்தியப்படாது என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஒரே சார்ஜில் பெங்களூரிலிருந்து கோவையை எட்டிப் பிடித்து எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

பெங்களூரில் வசிக்கும் அகில் வெங்கடேஸ்வரன் என்பவர் கோவைக்கு தனது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் சென்ற அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் காலை 5.30 மணிக்கு பெங்களூரில் புறப்பட்டு பிற்பகல் 12.40 மணிக்கு கோவைிலுள்ள கோவைபுதூர் வீட்டிற்கு சென்றடைந்தார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இடையில் கிருஷ்ணகிரி மற்றும் வைகுண்டம் ஆகிய இடங்களில் அரை மணிநேரம் ஓய்வு எடுத்து பயணத்தை தொடர்ந்துள்ளார். பெங்களூரிலிருந்து கோவைக்கு 7 மணிநேரத்தில் அந்த கோனா எலெக்ட்ரிக் காரில் சென்றடைந்த நிலையில், காரின் ட்ரிப் மீட்டரில் 389 கிமீ தூரத்தை அந்த கார் ஒரே சார்ஜில் கடந்திருந்ததுடன், மேலும் 16 கிமீ தூரம் வரை பயணிக்கும் அளவுக்கு சார்ஜ் இருந்ததாக காட்டி இருக்கிறது.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஆக, ஒரே சார்ஜில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் 405 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பை வழங்குவது உறுதியாகி இருக்கிறது. அராய் சான்றுபடி நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், ஒரே சார்ஜில் 405 கிமீ தூரம் பயணிக்கும் என்பதே மிகப்பெரிய விஷயமாகவே கருத முடியும்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இதன்மூலமாக, நீண்ட தூர பயணங்களுக்கும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தும் தைரியத்தை உரிமையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது. ஆனால், சில விஷயங்களை இந்த பயணத்தின்போது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் உரிமையாளர் அகில் வெங்கடேஸ்வரன் சமரசம் செய்து கொண்டுள்ளார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அதாவது, பயணத்தின்போது காரை 70 முதல் 90 கிமீ வேகத்தில் சீராக இயக்கி இருக்கிறார். அதற்கு மேல் ஓட்டினால் பேட்டரி திறன் வேகமாக கரைந்து போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று, பயணத்தின்போது 40 முதல் 50 சதவீத தூரத்திற்கு ஏசி சாதனத்தை பயன்படுத்தாமல், புளோயர் எனப்படும் காற்று மட்டும் வழங்கும் புளோயரை பயன்படுத்தி சென்றுள்ளார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

நீண்ட தூர பயணங்களின்போது ஏசி இல்லாமல் ஓட்டுவது என்பது மிக கடினமான விஷயமாகவும், வெளிக்காற்று மூலமாக அயர்ச்சி ஏற்படும் வாய்ப்பை உருவாக்கும். கோவையிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் திரும்புவதற்காக, 16A சார்ஜர் மூலமாக 3 பின் சாக்கெட்டில் வைத்து சார்ஜ் ஏற்றியுள்ளார். இடையில் மின்சார தடை, வோல்டேஜ் பிரச்னைகளால் ஃபாஸ்ட் சார்ஜரையும் பயன்படுத்தி உள்ளார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

பேட்டரி 2 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவுக்கு முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 14 மணிநேரம் பிடித்துள்ளது. ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தவில்லை என்றால் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு மேலும் 3 மணிநேரம் பிடித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெங்களூரில் பெஸ்காம் நிறுவனத்தின் 25kW ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 1.5 மணிநேரத்தில் இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

கோவையிலிருந்து பெங்களூர் திரும்பும் சாலையானது சற்று மேடான நிலப்பரப்பை கொண்டுள்ள நிலையில், ஒரே சார்ஜில் பெங்களூரை அடைவது சற்று கடினமான விஷயமாகவே அவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில், கிட்டத்தட்ட 130 கிமீ தூரத்திற்கு வால்வோ பி9ஆர் பஸ்சை பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால், காற்றால் ஏற்படும் தடை குறைந்ததால், ஓரளவு சமாளித்து பெங்களூரை அடைந்துவிட்டார். மணிக்கு 90 முதல் 100 கிமீ வேகத்தில் காரை இயக்கி வந்துள்ளார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

பெங்களூரை அடைந்தபோது, காரின் பேட்டரியில் மேலும் 12 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. இதுகுறித்து அகில் வெங்கடேஸ்வரன் கூறுகையில்," பெங்களூரிலிருந்து கோவைக்கு ஃபோர்டு எண்டெவர் (3.2லிட்டர் டீசல் மாடல்) எஸ்யூவியை பயன்படுத்துவது வழக்கம். டீசலுக்கு மட்டும் ரூ.5,500 செலவாகும்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஆனால், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் பெங்களூரிலிருந்து கோவை சென்று மீண்டும் பெங்களூர் திரும்புவதற்கு ரூ.500 மட்டுமே செலவாகி இருக்கிறது. போவதற்கும், வருவதற்கும் தலா ரூ.250 மட்டுமே மின் செலவாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வெறும் 250 ரூபாயில் பெங்களூர் டு கோவை... அசத்திய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

பெங்களூரில் உள்ள அகில் வெங்கடேஸ்வரன் வீட்டில் மாடியில் சூரிய மின்தகடுகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது. அதன் மூலமாக தனது காரை சார்ஜ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், முழுக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத கட்டமைப்பையும், கார் மாடலையும் அகில் வெங்கடேஸ்வரன் பயன்படுத்துகிறார்.

தகவல் மற்றும் படங்கள் உதவி: 1, 2, 3

Most Read Articles
English summary
Hyundai Kona electric car owner has shared his Bangalore to Coimbatore long journey experience on social media.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X