ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரின் உண்மையான ரேஞ்ச் எவ்வளவு? என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் மின்சார கார் கோனா. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த மின்சார கார் ஆகும். ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி, இந்திய சந்தையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் செக்மெண்ட்டில் அதிக டிரைவிங் ரேஞ்ச் கொண்ட காராக ஹூண்டாய் கோனாவை குறிப்பிடலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

எம்ஜி இஸட்எஸ் மின்சார எஸ்யூவி மற்றும் டாடா நெக்ஸான் மின்சார எஸ்யூவி ஆகிய 2 கார்களுடன் கோனா போட்டியிட்டு வருகிறது. இந்த இரண்டு கார்களும், ஹூண்டாய் கோனாவிற்கு பின் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மின்சார கார், ஹூண்டாய் கோனாதான்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 452 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். இது அராய் அமைப்பால் சான்று அளிக்கப்பட்ட டிரைவிங் ரேஞ்ச் ஆகும். இந்த சூழலில், கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கோடு வரை ஹூண்டாய் கோனா மின்சார கார் ஓட்டப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

கோனா கேரளா என்ற யூ-டியூப் சேனலில், இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் தனது திட்டம் என்ன? என்பதை முழுமையாக விவரிக்கும் காட்சிகளுடன் இந்த காணொளி தொடங்குகிறது. அனைத்தும் முடிவடைந்த பின், டீலர்ஷிப்பில் இருந்து ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரை அவர் எடுத்து கொள்கிறார்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

அத்துடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் காட்டிய டிரைவிங் ரேஞ்ச் மற்றும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது? என்பதையும் அவர் காட்டுகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்பில் இருந்து கோழிகோட்டில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப் வரை பயணம் செய்வதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். அதற்கு ஏற்ப அவரது பயணம் தொடங்கியது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

ஆரம்ப புள்ளியில் இருந்து அவர் சென்று சேர வேண்டிய இலக்கு சரியாக 409 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தது. ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரின் உண்மையான டிரைவிங் ரேஞ்ச் என்ன என்பதை கண்டறியும் வகையில் ஒரு சோதனை முயற்சியாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஹூண்டாய் கோனா காரின் ஓட்டுனர் 100 சதவீத சார்ஜ் உடன் டீலர்ஷிப்பில் இருந்து புறப்பட்டார்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

69 கிலோ மீட்டர்கள் காரை ஓட்டிய பிறகு அவர் பைபாஸ் சாலையை பிடித்தார். கேரளாவில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே பெரும்பாலான நேரங்களில் சாலை நெரிசலாகதான் இருக்கும். ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி ஒரு தனித்துவமான வசதியுடன் வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

இதன்படி காரில் ஓட்டுனர் தனியாக இருந்தால், அவரது பக்கத்திற்கு மட்டும் ஏசி-யை ஆன் செய்து கொள்ள முடியும். ஹூண்டாய் கோனா காரின் ஓட்டுனர் அதைதான் செய்தார். 103 கிலோ மீட்டர்களை கடந்த பிறகு, ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி கார், பேட்டரி அளவில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருந்தது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

161 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த பின்பு, ஓட்டுனர் சிறிய இடைவெளியை எடுத்து கொண்டார். அப்போது இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 209 கிலோ மீட்டர்கள் டிரைவிங் ரேஞ்ஜை காட்டி கொண்டிருந்தது. இடைப்பட்ட தொலைவை கடப்பதற்கு பேட்டரியின் அளவில் 34 சதவீதத்தை கார் நுகர்ந்திருந்தது. அதன்பின் ஓட்டுனர் சிறிது நேரத்தில் கொச்சியை அடைந்தார். அங்கு போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

இது அவருக்கு நேர விரயத்தை ஏற்படுத்தியதே தவிர, காரின் ரேஞ்ச் பெரிதாக பாதிக்கப்படவில்லை. கோனா மின்சார எஸ்யூவி ஐட்லிங்கில் இருக்கும் சமயங்களில் அதிகளவு ஆற்றலை நுகரவில்லை என்பதால், ரேஞ்ச் பாதிக்கப்படவில்லை. பேட்டரியின் அளவில் 50 சதவீதத்தை பயன்படுத்திய நிலையில், கோனா மின்சார காரானது, 233 கிலோ மீட்டர்களை கடந்திருந்தது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

அத்துடன் மேலும் 160 கிலோ மீட்டர்கள் பயணம் செய்வதற்கான சார்ஜ் இருந்தது. ஒரு கட்டத்தில் செல்ல வேண்டிய தொலைவு 112 கிலோ மீட்டர்களாக இருந்தது. எனினும் அந்த சமயத்தில், 137 கிலோ மீட்டர்கள் பயணிப்பதற்கு தேவையான சார்ஜ் காரில் இருந்தது. அத்தகைய சூழ்நிலைகளிலும் கோனா மின்சார எஸ்யூவி மிக சிறப்பாக செயல்பட்டது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் ஹூண்டாய் கோனா இவ்வளவு தூரம் பயணிக்குமா? டெஸ்ட் ரிசல்ட்டில் பிரம்மிப்பு

பேட்டரியில் 7 சதவீத சார்ஜ் மீதமிருந்த நிலையிலேயே, கோழிக்கோட்டில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்பை அந்த கார் சென்றடைந்து விட்டது. ஆக மொத்தத்தில் ஒரு முறை செய்யப்பட்ட சார்ஜிலேயே ஹூண்டாய் கோனா 400 கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணித்துள்ளது. இன்னும் துல்லியமாக சொல்வதென்றால், 93 சதவீத சார்ஜில் 409 கிலோ மீட்டர்களை அந்த கார் கடந்துள்ளது.

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி காரின் ஒட்டுமொத்த செயல்திறன் மிக சிறப்பாகவே இருந்தது. இந்த பயணம் முழுவதும் ஓட்டுனர் ஈக்கோ மோடில்தான் காரை ஓட்டினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச ரேஞ்சை பெறுவதற்காக பயணம் முழுமைக்கும் ஓட்டுனர் ஈக்கோ மோடைதான் பயன்படுத்தினார்.

Most Read Articles
English summary
Hyundai Kona Electric SUV Real World Conditions Driving Range Test. Read in Tamil
Story first published: Tuesday, August 25, 2020, 21:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X