ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா அதன் ரேஞ்சை அதிகரித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிற்கான முதல் மின்சார காராக கோனா எலெக்ட்ரிக் காரை கடந்தாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரின் உற்பத்தி தளம் தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்ற காரணத்தினால், இந்த காரின் முதல் தயாரிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சை கொடியசைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

குறிப்பாக, இந்தியாவில் களமிறங்கிய முதல் எஸ்யூவி ரக மின்சார கார் என்பதால் கோனாவிற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு நிலவியது.

இந்த காரை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைச் செய்துவருகின்றது. அந்தவகையில், 2020 மாடலாக ஐரோப்பிய சந்தையில் களமிறங்கும் ஹூண்டாய் கோன எலெக்ட்ரிக் கார் சற்றே அதன் ரேஞ்சை உயர்த்திய நிலையில் அறிமுகம் செய்துள்ளது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

முன்னதாக, ஐரோப்பிய நாடுகளில் விற்பனைச் செய்யப்பட்டு கோனா எலெக்ட்ரிக் கார் 449 கிமீ ரேஞ்சை மட்டுமே வழங்கின. ஆனால், தற்போது ஹூண்டாய் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக அது 484 கிமீ ரேஞ்சை வழங்கும் நிலைக்கு உயர்துள்ளது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த ரேஞ்ச் பூஸ்ட் கோனாவின் டாப் வேரியண்டில் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதற்காக 64 kWh திறனுடைய பேட்டரி இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது, 204 எச்பி திறனுடைய மின் மோட்டாருக்கு தேவையான சக்தியை வழங்கும்.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஆனால், இந்தியாவிற்கான கோனாவில் இதுபோன்ற எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. ஆகையால், இந்தியாவில் 39.2 kWh திறனுடை பேட்டரி பேக்கைக் கொண்ட கோனாவே விற்பனைக்குக் கிடைக்கும். இதில் 136 எச்பி பவருடைய மின் மோட்டார் காணப்படுகின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த திறனில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படதா காரணத்தால் முந்தைய கோனா எத்தகைய ரேஞ்சை வழங்கியதோ அதே ரேஞ்சைதான் 2020 கோனாவும் இந்தியாவில் வழங்கும். ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மட்டும் உயர் ரேஞ்சை அவை இருக்கின்றன.

இந்தியாவில் கோனா மின்சார கார் ஒரு முழுமையான சார்ஜில் 452 கிமீ ரேஞ்சை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த சிறப்பான ரேஞ்சிற்காக லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதனை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணிநேரங்கள் மற்றும் பத்து நிமிடங்கள் தேவைப்படுகின்றன. இதுவே, டிசி ஃபாஸ்ட் சார்ஜில் வைத்து சார்ஜேற்றினால் வெறும் 57 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜை பெற்றுவிடும். இதுமட்டுமின்றி, செயல்திறனிலும் இந்த மின்சார கார் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

குறிப்பாக, இந்தியாவிற்கான ஹூண்டாய் கோனா மின்சார கார் 9.7 விநாடிகளில் 100 கிமீ என்ற வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அதேசமயம், ஐரோப்பிய நாடுகளின் கோனா எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ஜ் அதிகரிப்பு பற்றிய தகவலை ஹூண்டாய் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த அதிகே ரேஞ்ச் போன்று கூடுதலாக பல்வேறு சிறப்பு வசதிகளை கோனாவில் ஹூண்டாய் மேற்கொண்டிருப்பதாக சில நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில், குறைவான ரோலிங் ரெசிஸ்டன்ட்ஸ் கொண்ட டயர்கள் அதிக ரேஞ்சிற்காக புதிதாக இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இத்துடன், எஞ்ஜின் போன்ற திறன் வழங்கும் பாகங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை ஹூண்டாய் மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது. இத்தகைய மாற்றம் செய்த கோனா எலெக்ட்ரிக் கார்களை சிஷெக் ரிபப்ளிக் தயாரிப்பு ஆலையில் வைத்து உற்பத்திச் செய்து, ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி செய்ய இருக்கின்றது ஹூண்டாய்.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

மின்சார வாகனங்களின் மீது அதிக கவனத்தைச் செலுத்தி வரும் ஹூண்டாய் அதன் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொடர்ந்து, மின்சார வாகனங்கள் மட்டுமின்றி ஐயோனிக் மற்றும் நெக்ஸோ போன்ற ப்யூவல் செல் (அதிக ரேஞ்சை வழங்கும்) கார்களின் விற்பனையை அதிகரிக்கவும் சில பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

விரைவில் இந்தியாவிலும் ப்யூவல் செல் திறனுடைய அதிக ரேஞ்சை வழங்கும் கார்களை களமிறக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான ஆய்வு பணியில் ஹூண்டாய் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

மேலும், மலிவு விலையுடைய மின்சார காரை இந்தியாவில் களமிறக்கவும் குறிப்பிட்ட ஆய்வினை ஹூண்டாய் செய்து வருகின்றது. இருப்பினும், ஹூண்டாய் சார்பில் தற்போது கோனா கார் மட்டுமே எலெக்ட்ரிக் ரகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த கார் இந்தியாவில் ரூ. 23.71 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்த கார்கள் இந்தியாவில் சிகேடி வழியாக தென் கொரியாவில் இருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றது. இதனாலயே இத்தகைய உயர்ந்த விலையில் அது இருக்கின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஏற்கனவே அதிக விலைக் கொண்டதாக காணப்படும் இந்த கோனா மத்திய அரசின் நடவடிக்கையால் மேலும் அதிக விலைக் கொண்டதாக மாறவிருக்கின்றது.

இந்திய அரசு விரைவில் (ஏப்ரல் 1) இந்தியாவில் சிகேடி வாயிலாக கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வரியை உயர்த்தவிருக்கின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதனால், ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மிக கடுமையாக உயரவிருக்கின்றது. இதுபோன்ற, காரணங்களால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள் நாட்டிலேயே வைத்து அனைத்து வாகனங்களையும் தயாரிக்க திட்டமிட்டு வருகின்றது.

ரேஞ்சை உயர்த்தி கொண்ட ஹூண்டாய் கோனா மின்சார கார்.. எவ்வளவு அதிகரிச்சிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதன்படி, ஹூண்டாய் நிறுவனமும் முழுக்க முழுக்க உள்ளூரிலேயே வைத்து புதிய மின்சார கார்களைக் களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் மிகக் குறைந்த விலையுடைய மின்சார காரை களமிறக்க இருப்பதாகவும் அது முன்னதாக அறிவித்திருந்தது.

Most Read Articles
English summary
Hyundai Kona EV Range Increased By 484 KM's. Read In Tamil.
Story first published: Monday, March 9, 2020, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X