மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

கடந்த ஜூலை மாதத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சந்தையில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

தென் கொரியாவை தாயகமாக கொண்டு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் தயாரிப்புகளை சந்தைப்படுத்திவரும் ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 38,300 தயாரிப்பு வாகன கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

இந்த எண்ணிக்கை 2019 ஜூலை மாதத்தை காட்டிலும் 2.1 சதவீதம் குறைவாகும். ஏனெனில் அப்போது 39,010 யூனிட் ஹூண்டாய் கார்கள் விற்பனையாகி இருந்தன. ஆனால் வெறும் 21,320 யூனிட்களை காட்டிலும் 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் இந்த எண்ணிக்கை சுமார் 79.2 சதவீதம் அதிகமாகும்.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

கடந்த மாதம் அதிகளவில் விற்பனையான ஹூண்டாய் கார் என்று பார்த்தால், 11,549 மாதிரிகள் விற்பனையுடன் க்ரெட்டா முதலிடத்தில் உள்ளது. இது 2019 ஜூலையில் இதன் 6,585 யூனிட்களை ஒப்பிடும்போது 75 சதவீதம் அதிகமாகும். அதுவே கடந்த ஜூன் மாதத்தில் 7,207 க்ரெட்டா கார்கள் விற்பனையாகி இருந்தன.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

எஸ்யூவி ரக மாடலான க்ரெட்டாவின் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு சமீபத்தில் அறிமுகமான இதன் புதிய தலைமுறையின் டீசல் வேரியண்ட் தான் மிக முக்கிய காரணமாகும். க்ரெட்டா மட்டுமின்றி கடந்த மாதத்தில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 மாடலின் மீதும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஈர்ப்பை காட்டியுள்ளனர்.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

இந்த லிஸ்ட்டில் 8,368 மாதிரி கார்கள் விற்பனையுடன் இரண்டாம் இடத்தில் உள்ள இந்த மாடல் 2019 ஜூலையில் 5,081 யூனிட்களும், 2020 ஜூன் மாதத்தில் 3,593 யூனிட்களும் விற்பனையாகி இருந்தது. கடந்த மாதம் விற்பனையில் இந்த மாடல் கண்டிருக்கும் வளர்ச்சியின் மூலம் புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடல் அதன் பிரிவில் எத்தகைய பிரபலத்துடன் இருக்கிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் சப்காம்பெக்ட் எஸ்யூவி மாடலான வென்யூ உள்ளது. ஐஎம்டி என்ற பெயரில் இந்த சப்-4 மீட்டர் காரில் கொண்டுவரப்பட்ட க்ளட்ச்-பெடல் ட்ரான்ஸ்மிஷன் இதன் விற்பனையை கணிசமாக அளவு உயர்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

இருப்பினும் 2019 ஜூலையை காட்டிலும் கடந்த மாதத்தில் குறைவான வென்யூ கார்களையே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில் 6,734 வென்யூ கார்கள் இந்தியாவில் விற்பனையாகி இருந்தன. ஆனால் கடந்த ஜூன் மாதத்தை விட 63 சதவீதம் கூடுதலாக இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

வென்யூவின் விற்பனை எண்ணிக்கையில் இருந்து சில நூறு யூனிட்கள் விற்பனை குறைவுடன் ஐ20 எலைட் மாடல் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. வென்யூவை போன்று ஐ20 எலைட் கார்களும் 2019 ஜூலையை காட்டிலும் குறைவாகவும், கடந்த ஜூன் மாதத்தை விட அதிகமாகவுமே கடந்த 2020 ஜூலை மாதத்தில் விற்பனையாகியுள்ளன.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

ஆனால் இதற்கு அடுத்துள்ள ஹூண்டாய் வெர்னா மற்றும் அவ்ரா மாடல்கள் 2019 ஜூலை மற்றும் 2020 ஜூன் என இரு மாதங்களிலும் அதிக விற்பனை எண்ணிக்கையையே கடந்த மாதத்தில் பெற்றுள்ளன. ஆனால் இதற்கு எதிர்மறையான விற்பனையை இவற்றிற்கு அடுத்ததாக உள்ள சாண்ட்ரோ சந்தையில் பதிவு செய்துள்ளது.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...
Rank Model Jul-20 Jul-19 Growth (%)
1 Hyundai Creta 11,549 6,585 75.38
2 Hyundai Grand i10 8,368 5,081 64.69
3 Hyundai Venue 6,734 9,585 -29.74
4 Hyundai Elite i20 6,344 9,012 -29.60
5 Hyundai Verna 1,906 1,890 0.85
6 Hyundai Aura 1,839 1,430 28.60
7 Hyundai Santro 1,351 5,309 -74.55
8 Hyundai Tucson 63 47 34.04
9 Hyundai Kona 26 17 52.94
10 Hyundai Elantra 20 54 -62.96

இதற்கு அடுத்து இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ள டக்ஸன், கோனா மற்றும் எலண்ட்ரா மாடல்கள் இரு இலக்கங்களில் தான் விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளன. இவற்றில் டக்ஸன் மாடலுக்கு சமீபத்தில் தான் 2020ஆம் ஆண்டிற்காக ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

மற்ற நிறுவனங்களை போல் ஹூண்டாய் மோட்டார்ஸும் தற்சமயம் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதற்கு காரணம் உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே, கொரோனா. இந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கினால் 2020 ஏப்ரலில் ஹூண்டாய் உள்பட அனைத்து நிறுவனங்கள் சந்தையில் பூஜ்ஜிய விற்பனையையே பதிவு செய்தன.

மீண்டும் சூடுப்பிடிக்கும் ஹூண்டாய் கார்களின் விற்பனை... தொடரும் க்ரெட்டாவின் ஆதிக்கம்...

ஆனால் அத்தகைய நிலையில் இருந்து பார்க்கும்போது கடந்த ஜூலையில் சிறப்பான அளவில் தயாரிப்புகளை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், புதிய தலைமுறை க்ரெட்டா, வெர்னா மற்றும் வென்யூ மாடல்கள் தான் என்றால், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles
English summary
Hyundai Sales Data Break Up July 2020 – Creta, Grand i10, Venue, i20 Table Code
Story first published: Sunday, August 9, 2020, 22:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X