கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 மார்ச் மாதத்திற்கான விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதனை விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் மொத்தம் 32,279 யூனிட்கள் விற்பனையை கடந்த மார்ச் மாதத்தில் பதிவு செய்துள்ளது. இதில் 26,300 யூனிட்கள் இந்தியாவிலும், மீதி 5,979 யூனிட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வெளிநாட்டு சந்தைக்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

வருடந்தோறும் இந்திய சந்தையில் விற்பனையில் சரிவை சந்தித்துவரும் ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் 40 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த மாதத்தில் 26,300 கார்கள் விற்பனையை பதிவு செய்துள்ள ஹூண்டாய் 2019 மார்ச்சில் 44,350 கார்களை சந்தையில் விற்பனை செய்திருந்தது.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

இருப்பினும் 2019-20 பொருளாதார ஆண்டு ஹூண்டாய்க்கு விற்பனையில் சிறிது முன்னேற்றத்தை கொடுத்த வருடமாக தான் பார்க்கப்படுகிறது. இந்த சிறிய அளவிலான வளர்ச்சியை இந்நிறுவனத்தின் காம்பெக்ட்-எஸ்யூவி மாடலான வென்யூ தான் கொடுத்தது எனலாம். ஏனெனில் இந்த எஸ்யூவி மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே மிக பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

இதனால் தான் ஹூண்டாய் நிறுவனம் அடுத்ததாகவும் எஸ்யூவி மாடலாக க்ரெட்டாவை சமீபத்தில் சந்தைக்கு கொண்டுவந்தது. இதன் மூலமாக அடுத்த சில வருடங்களுக்கு எஸ்யூவி பிரிவில் நிலையான இடத்தை தக்க வைத்து கொள்ளலாம் என இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

ஆனால் ஹூண்டாயின் இந்த நம்பிக்கையை சிதைக்கும் விதமாக கொரோனா வைரஸ் ஆட்டோமொபைல் துறையை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் 2020 மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் விற்பனையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

மேலும் இதே நிலை தான் இந்த ஏப்ரல் மாதத்திலும் தொடரும் என தெரிகிறது. இந்திய அரசாங்கமும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் ஹூண்டாய் உள்பட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலையை ஏற்கனவே மூடிவிட்டன.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

கடந்த ஆண்டில் ஏகப்பட்ட அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்த ஹூண்டாய் நிறுவனம் இந்த ஆண்டில் இந்திய சந்தைக்கென நிறைய திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஐ10 க்ராண்ட் நியோஸ், அவ்ரா காம்பெக்ட் செடான் மற்றும் புதிய வென்யூ எஸ்யூவி உள்ளிட்டவற்றின் இந்திய அறிமுகங்கள் இந்நிறுவனத்தின் இந்த திட்டங்களில் அடங்கும்.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

இவை மட்டுமின்றி அடுத்த தலைமுறை ஐ20 எலைட் மாடலை அறிமுகப்படுத்தும் பணியிலும் இந்நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் புதிய ஐ20 எலைட் மாடல் இந்த வருட இறுதிக்குள்ளாக சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் மிக பெரிய சரிவை கண்டுள்ள ஹூண்டாய்... மார்ச் மாத விற்பனை நிலவரம் வெளிவந்தது...

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தான் வென்யூ மாடலால் சந்தையில் சிறிதளவு நேர்மறையான விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்து வந்தது. ஆனால் அதற்குள்ளாக மற்ற நிறுவனங்களை போல் கொரோனா வைரஸால் இந்நிறுவனத்தின் விற்பனை மொத்தமாக சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போது வெளியாகியுள்ள விற்பனை நிலவரம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Most Read Articles
English summary
Car Sales Report For March 2020: Hyundai India registers A 41% Decline In Sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X