பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

டொயோட்டா ஃபார்ச்சூனர் மார்க்கெட்டை குறிவைத்து பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

ஹூண்டாய் திட்டம்

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்திய கார் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான முனைப்பில் உள்ளது. தனது அங்கமாக செயல்படும் கியா மோட்டார் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருப்பது ஒரு பக்கம் சந்தோஷம் தந்தாலும், மறுபுறத்தில் தனது பிராண்டின் வர்த்தக வளர்ச்சியை தக்க வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

7 சீட்டர் மாடல்

அந்த வகையில், பிரிமீயம் வகை எஸ்யூவி, எம்பிவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதாவது, கியா டெலுரைடு எஸ்யூவியின் அடிப்படையிலான தனது பேலிசேடு எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

பெரிய வகை எஸ்யூவி

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான டபுள் எக்ஸ்எல் வகை எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் பேலிசேடு தோற்றத்தில் பிரம்மாண்டமான மாடலாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான சந்தையில் நிலைநிறுத்தப்படும்.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

சாஃப்ட் ரோடு எஸ்யூவி

ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் போன்று முழுமையான ஆஃப்ரோடு பயன்பாட்டு மாடலாக இல்லாமல், சாஃப்ட்ரோடு எஸ்யூவி மாடலாக இருக்கும். இந்த எஸ்யூவியின் ஒட்டுமொத்த தோற்றம் பிரம்மாண்டமாக இருப்பதுடன், ஏராளமான சிறப்பம்சங்களுடன் வசீகரிக்கிறது.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

வெளிப்புற அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முகப்பில் பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, 20 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், டியூவல் சைலென்சர் குழல்கள் என மிக அசத்தலான பல்வேறு அம்சங்களை வெளிப்புறத்தில் பெற்றிருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு இணையான பிரம்மாண்டம் இருந்தாலும், முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையான தோற்றத்தை வழங்கும் சொகுசு எஸ்யூவி கார் போல இருக்கிறது.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

பிரிமீயம் இன்டீரியர்

அமெரிக்க சந்தையில் விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவியில் அதிக தரமுடைய பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், உட்புறம் மிகவும் பிரிமீயமாக காட்சி தருகிறது. இந்த எஸ்யூவியில் இரண்டு திரைகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. மிக சொகுசான இருக்கைகள், தாராள இடவசதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவியில் ஹார்மன் கார்டன் அல்லது போஸ் சவுண்ட் சிஸ்டம், 10.25 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு சன்ரூஃப் அமைப்பு, சன் ஷேடுகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், 9 ஏர்பேக்குகள் என தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளின் பட்டியல் நீள்கிறது.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

எஞ்சின் தேர்வு

அமெரிக்காவில் ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவியில் 3.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், கியா கார்னிவல் எம்பிவி காரில் வழங்கப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் 200 பிஎச்பி பவரையும், 441 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் ஆப்ஷன்களிலும் வர வாய்ப்புள்ளது.

பிரம்மாண்டமான ஹூண்டாய் பேலிசேடு எஸ்யூவி இந்தியா வருகிறது?

எதிர்பார்க்கும் விலை

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகளைவிட இந்த புதிய எஸ்யூவி சற்று விலை அதிகம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு உண்டு. ரூ.40 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யூவி மாடலை எதிர்பார்ப்பவர்களுக்கும், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவருக்கு மாற்றுத் தேடுபவர்களுக்கும் இது சிறந்த சாய்ஸாக இருக்கும்.

Most Read Articles

English summary
Hyundai Motor is considering new Palisade premium SUV for India and it have potential to rival with Toyota Fortuner.
Story first published: Saturday, April 4, 2020, 12:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X