Just In
- 1 hr ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 13 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 13 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Sports
ராகுல் டிராவிட்டை பார்த்து கத்துக்கங்க... முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அப்ரிடி வேண்டுகோள்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேட்டரிக்கு மின்சாரம் செல்வதில் பிரச்சனை- அதிரடியாக கோனா எலக்ட்ரிக் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்
ஹூண்டாய் தனது கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை தானாக முன்வந்து இந்திய சந்தையில் திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் மோட்டார்ஸின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2019 ஏப்ரல் 1 முதல் 2020 அக்டோபர் 31 வரை தயாரிக்கப்பட்ட மொத்தம் 456 கோனா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

வாகனத்தின் அதி-மின்னழுத்த மின்கல (பேட்டரி) அமைப்புகளில் ஏற்படும் மின் குறைபாடு இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கைக்கு காரணம் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையை வாடிக்கையாளர்கள் இலவசமாக சரிசெய்து கொள்ளலாம் எனவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்களை வரிசைபடி ஹூண்டாய் அழைக்கவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை எந்தவொரு ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடமும் கொண்டுசென்று சிக்கலை தீர்த்துக் கொள்ளலாம்.

இதுகுறித்த ஹூண்டாய் அறிக்கையில், "ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) நிறுவனம் அதிக மின்னழுத்த பேட்டரி அமைப்பில் ஏற்படும் மின் குறைப்பாட்டை தீர்க்க சாத்தியமான திறனை ஆராய்வதற்காக 2019 ஏப்ரல் 01 முதல் 2020 அக்டோபர் 31 வரை உற்பத்தி செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் கார்களை ரீகால் செய்கிறது.

மேற்கூறிய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த 456 கோனா கார்களின் உரிமையாளர்களை எச்.எம்.ஐ.எல் தானாக முன்வந்து திரும்ப அழைக்கும். இந்த உரிமையாளர்கள் ஒரு கட்டமாக அறிவிக்கப்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் மின்சார வாகன விற்பனையாளர்களிடம் தங்கள் வாகனத்தை ஆய்வுக்கு கொண்டு வரலாம்.

நாடு முழுவதும் வலுவான சேவை மற்றும் ஆதரவு நெட்வொர்க்குடன் எச்.எம்.ஐ.எல் சிறந்த சேவையையும் கவனத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் மற்றும் தற்போதுவரையில் ஒரே எலக்ட்ரிக் காராக கோனா எஸ்யூவி விளங்குகிறது.

சமீபத்தில் மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று நம்மை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருந்த இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.23.75 லட்சமாக உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனைக்கு எம்ஜி இசட்எஸ் இவி கார் முக்கிய போட்டியாக உள்ளது.

கோனா எலக்ட்ரிக் காரில் 39.2 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 135 பிஎச்பி மற்றும் 394 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

பேட்டரியை 100 சதவீதம் நிரப்பி கொண்டு இந்த காரை அதிகப்பட்சமாக 452 கிமீ தூரம் வரையில் இயக்கலாம். நிலையான ஏசி சார்ஜர் உதவியுடன் இதன் பேட்டரியை முழுவதும் நிரப்ப 6 மணிநேரங்கள் தேவைப்படுகிறது. அதுவே டிசி விரைவான சார்ஜரின் மூலமாக 0-வில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 57 நிமிடங்களில் நிரப்பி விடலாம்.
இத்தகைய திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தான் தற்போது தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.