பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2021ஆம் ஆண்டிற்காக உருவாக்கியுள்ள பேலிசேடின் புதிய மாடல் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

காலிக்ராபி என அழைக்கப்படும் இந்த 2021 எஸ்யூவி காரானது கூடுதலான ட்ரிம் நிலைகளுக்காக அதன் ஓட்டுனர் உதவிகள் & தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு சிஸ்டங்களில் மாற்றங்களை பெற்றுள்ளது.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

பிரத்யேகமான டிசைனில் க்ரில்லை பெற்றுள்ள புதிய காலிக்ராபி காரில் 20 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், வெளிப்புறத்தில் நேர்த்தியான லைட்டிங் மற்றும் உட்புறத்தில் லெதர் டோர் பேனல்களை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

2021ஆம் ஆண்டிற்கான பேலிசேடு மாடலின் புதிய லக்சரி ட்ரிம் இந்த ஜூலை மாத துவக்கத்தில் இருந்து டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரியா சந்தையில் காலிக்ராபி கார் ஏற்கனவே விற்பனையை துவங்கிவிட்டது.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

இதற்கிடையில் பேலிசேடு மாடலின் கொரியன் லைனில் விஐபி தொகுப்பையும் சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் இணைத்திருந்தது. ஸ்பானிஷ் மாடல் எனவும் அழைக்கப்படும் இந்த புதிய ட்ரிம் வழக்கமான லிமிடேட் பேலிசேடு காரில் இருந்து குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் அப்கிரேட்களை பெற்றுள்ளது.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

இந்த அப்கிரேட்களில் ஆல்-வீல் ட்ரைவ், முன் & பின்புறத்தில் சிக்னெஜர் டெயில்லைட்ஸ் (பின்புறத்தில் அல்ட்ரா-அகல ப்ரேக் லைட்டுடன் உள்ளது), லெதர் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் மேற்கூறிய 20 இன்ச் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

இதில் அலாய் சக்கரங்கள் சிக்கலான மற்றும் சமச்சீரற்ற ஸ்போக் பேட்டர்ன் உடன் உள்ளன. இதனால் சிலந்தியின் வலை போன்று தோற்றமளிக்கும் இந்த அலாய் சக்கரங்கள் தான் பேலிசேடின் புதிய காலிக்ராபி ட்ரிம்மிற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேற்பை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேலிசேடு எஸ்யூவி மாடலின் லைன்-அப்பை விரிவுப்படுத்தும் ஹுண்டாய்... வருகிறது புதிய காலிக்ராபி ட்ரிம்

தோற்றத்தில் மற்ற பேலிசேடு ட்ரிம்களுடன் வேறுபடும் புதிய காலிக்ராபி ட்ரிம், முக்கோண வடிவிலான பாகங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட மெஷ் க்ரிட் டிசைனை ஏற்றுள்ளது. இத்தகைய அப்கிரேட்களை பெற்றுள்ள 2021 காலிக்ராபி மாடலின் ஆரம்ப விலை 48,890 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 37 லட்சமாகும்.

Most Read Articles

English summary
2021 Hyundai Palisade Calligraphy
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X