Just In
- 27 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
500 கிமீ ரேஞ்ச்... எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் புதிய அத்யாயம் எழுதப்போகும் ஹூண்டாய்!
எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம். இந்த கட்டமைப்புக் கொள்கை வியக்கும் வைக்கும் பல நன்மைகளுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

சூடுபிடிக்கும் சந்தை
எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் சூடுபிடித்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்கள் இல்லாமல் காலம் தள்ள முடியாத நிலை இருக்கிறது. இதற்காக, பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

யுக்தி மாறுகிறது
தற்போது ஏற்கனவே உள்ள பெட்ரோல், டீசல் கார்களின் கட்டமைப்புக் கொள்கையை பயன்படுத்தி, அதன் அடிப்படையிலேயே எலெக்ட்ரிக் கார்களை பல நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது முழுமையாக கை கொடுக்காது. இதனை மனதில் வைத்து, எலெக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

பிரத்யேக கட்டமைப்புக் கொள்கை
ஹூண்டாய் இ-ஜிஎம்பி (E-GMP) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் ஏராளமான புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஹூண்டாய் உருவாக்க இருக்கிறது. இதே கட்டமைப்புக் கொள்கையில் புத்தம் புதிய கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட உள்ளது.

அதிசெயல்திறன் மிக்க மின்சார கார்கள்
இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் அதிசெயல்திறன் மிக்க பேட்டரி பொருத்தப்பட உள்ளது. அதேபோன்று, செயல்திறனையும், அதிக தூரம் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படும்.

500 கிமீ ரேஞ்ச்
இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சோதனை நிலைகளில் 500 கிமீ தூரத்திற்கும் மேல் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதேபோன்று, இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் கார்களின் பேட்டரியை 18 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.

அதீத செயல்திறன்
அதிக பயண தூரத்தை வழங்குவதுடன் இதன் செயல்திறன் மிக்க மாடல்களானது 0 - 100 கிமீ வேகத்தை 3.5 வினாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, மணிக்கு 260 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

சிறந்த பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளுக்கு அதிக இடவசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த கார்களில் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படும்.

முதல் மாடல்
ஹூண்டாய் நிறுவனத்தின் இ-ஜிஎம்பி கட்டமைப்புக் கொள்கையில் முதல் மாடலாக ஐயோனிக்-5 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து, பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். வரும் 2025ம் ஆண்டில் உலக அளவில் பேட்டரியில் இயங்கும் 23 எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்துவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த மதிப்பு
ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரண்டு பிராண்டுகளிலும் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் கார்கள் களமிறக்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் இந்த புதிய ஹூண்டாய் கார்கள் சந்தையில் மிகச் சிறந்த தேர்வாக மாறும் என்று நம்பலாம்.