ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, கார் நிறுவனங்கள் பிஎஸ்6 எஞ்சினுடன் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. கொரோனா தாக்கத்தின் காரணமாக, சிறப்பு நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. செய்திக் குறிப்பு அல்லது சமூக வலைதளங்களை பயன்படுத்தி அறிமுக விபரத்தை அறிவித்து வருகின்றன.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

அந்த வகையில், பட்ஜெட் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் சான்ட்ரோ காரில் பிஎஸ்6 எஞ்சினை பொருத்தி ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6 மாடலானது வசதிகளை பொறுத்து எரா எக்ஸிகியூட்டிவ், மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6 மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட மாடலிலும் கிடைக்கும். சிஎன்ஜி மாடலில் இருக்கும் பெட்ரோல் எஞ்சின் 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், சிஎன்ஜி மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் சான்ட்ரோ காரில் டியூவல் டர்ன் இண்டிகேட்டர் கொண்ட சைடு வியூ மிரர்கள், 14 அங்குல ஸ்டீல் வீல்கள், டியூவல் டோன் பம்பர், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இநத் காரில் ஓட்டுனருக்கான ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் சான்ட்ரோ பிஎஸ்6 மாடலானது ரூ.4.57 லட்சம் முதல் ரூ.6.20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக ஹூண்டாய் சான்ட்ரோ கார் இருக்கும்.

Most Read Articles
English summary
Hyundai has launched the BS6 version of Santro in India price starting at Rs.4.57 lakh (ex-showroom, Delhi). It will available petrol and petrol-CNG fuel options.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X