1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் விரைவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த முழுமையான விவரங்களை இந்த செய்தியில் காண்போம்.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

ஹுண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டில் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடலுக்கு ஆரம்பம் முதலே வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இந்த மாடலின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டும் விரைவில் இந்தியாவில் பிஎஸ்6 தரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டு வந்தன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

இந்நிலையில் இந்த புதிய வேரியண்ட் டெல்லியில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதை பிரபல இந்திய ஆட்டோமொபைல் செய்தி நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலின் புதிய டிசைன் அமைப்புடன் அறிமுகமாகவுள்ள இந்த 2020 மாடல் தனது வழக்கமான க்ரில் பகுதியை அப்படியே பெற்றுள்ளது. இந்த க்ரில் பகுதிக்கு இருபுறமும் டர்ன் சிக்னல்களுடன் இரண்டாக பிளவுப்பட்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

மேலும் எல்இடி டிஆர்எல்களையும் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடல் பெற்றுள்ளதால், பார்ப்பதற்கு மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் ப்ரீமியம் உணர்வை தருகிறது. இந்த புதிய க்ராண்ட் ஐ10 மாடலின் பக்கவாட்டுகளில் மிகவும் குறைவான மாற்றங்கள் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

15 இன்ச் அலாய் சக்கரங்களுடன் விற்பனையாகவுள்ள இந்த கார் கருமையான நிறத்தில் ரூஃப் மற்றும் கூர்மையான பக்கவாட்டு லைன்கள் & க்ரீஸ்களை நீளத்திற்கு இணையாக பெற்றுள்ளது. பின்புறத்தில் இந்த ஹேட்ச்பேக், இருமுனைகளிலும் ஒளி பிரதிப்பலிப்பான்களை கொண்ட, சில இடங்களில் சில்வர் கார்னிஷிங் செய்யப்பட்ட, பெரிய அளவிலான பம்பரை கொண்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

உட்புறத்தில் பார்த்தோமேயானால், கருப்பு மற்றும் க்ரே என இரு நிறங்களில் வடிவமைக்கப்பட்ட டேஸ்போர்டுடன் புதிய கேபின் அமைப்பு இந்த புதிய 2020 மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக விருப்ப தேர்வுகளுடன் மிக பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சென்ட்ரல் கன்சோலாக பொருத்தப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் வசதிகளை தேர்ந்தெடுக்க இருபுறங்களிலும் பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. விலையுயர்ந்த காரின் தோற்றத்தை வரவழைப்பதற்காக இந்த புதிய மாடலின் கேபினில் சில மெருதுவான பாகங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள புதிய நியோஸ் மாடலின் இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை, சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அவ்ரா மாடலும் தனது என்ஜின் தேர்வுகளுள் ஒன்றாக கொண்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

மொத்தம் 10 வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அவ்ரா மாடலை போல, 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கும் 10 வேரியண்ட் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வு புதிய நியோஸ் மாடலின் விலையுயர்ந்த வேரியண்ட்டிற்கு மட்டும் தான் கொடுக்கப்படவுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

இந்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரையும் 172 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இந்த பெட்ரோல் என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

பாதுகாப்பு தொழிற்நுட்பங்களாக, அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, சீட்-பெல்ட்டை நினைவூட்ட அலாரம், அதிவேகத்தை எச்சரிக்கும் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக்ஸ்-ஆல் சான்றழிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இருக்கை உள்ளிட்டவற்றை புதிய 2020 நியோஸ் கார் கொண்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் அறிமுகமாகவுள்ள 2020 ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்...

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் இந்திய விலை பற்றிய எந்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை. ஆட்டோ எக்ஸ்போ துவங்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் ஹூண்டாயின் இந்த புதிய ஹேட்ச்பேக் மாடலின் விலை எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம். 100 பிஎச்பி ஆற்றலில் இவ்வளவு பெரிய கார், இந்திய சாலைக்கு எந்தளவிற்கு ஏற்றதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

English summary
Hyundai Grand i10 Nios 1.0-litre Turbo Petrol Model To Be Showcased At The Auto Expo
Story first published: Tuesday, January 28, 2020, 13:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X