Just In
- 26 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 1 hr ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 2 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 2 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் எத்தனை கார்களை விற்பனை செய்துள்ளது தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத விற்பனை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் இந்திய சந்தையில், 48,800 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 44,600 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலமாக ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாத இறுதியில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் ஏப்ரல், மே மாதங்களில் கார் விற்பனை அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த மாதங்களில் கார் விற்பனை படிப்படியாக மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

குறிப்பாக கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதில் சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதியதும், பண்டிகை காலமுமே இதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு கார் நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில், ஹூண்டாய் நிறுவனமும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இருந்து அதிக பயணிகள் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான ஹூண்டாய், 17 சதவீத சந்தை பங்குடன் இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.

அதே சமயம் இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 47.4 சதவீத சந்தை பங்குடன் தொடர்ந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹூண்டாய் நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில், நடப்பாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை கண்டுள்ளது.

ஏனெனில் நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 56,605 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த நவம்பர் மாதத்தில், விற்பனை எண்ணிக்கை 48,800 ஆக குறைந்துள்ளது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த அக்டோபர் மாத விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, பெரும்பாலான கார் நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், பயணிகள் கார் துறை கடந்த நவம்பர் மாதம் 2,86,353 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 3,33,659 ஆக இருந்தது. இது 14 சதவீதம் குறைவாகும். அனேகமாக பண்டிகை காலம் முடிவடைந்தது இந்த சரிவிற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் புதிய ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரை, கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காருக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. எனவே வரும் மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.