ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் தனது புதிய தயாரிப்பான வெர்னா ஃபேஸிஃப்ட் மாடலை நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் என்ஜினின் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

கசிந்துள்ள இந்த விபரங்களின்படி, ஹூண்டாயின் இந்த வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 கார், கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 1.5 லிட்டர் CRDI டீசல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுகளில் அறிமுகமாகவுள்ளது. இதில் டீசல் என்ஜின் 113 பிஎச்பி பவர்/250 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

டீசல் வேரியண்ட் 113 பிஎச்பி பவர்/144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. தற்போதைய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலில் 1.4 லிட்டர் டீசல் & பெட்ரோல், 1.6 லிட்டர் டீசல் & பெட்ரோல் உள்ளிட்ட என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

இதில் 1.4 லிட்டர் என்ஜின் தேர்வுகள் முறையே 89 பிஎச்பி பவர்/220 என்எம் டார்க் திறன் மற்றும் 99 பிஎச்பி பவர்/132 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. மற்ற 1.6 லிட்டர் என்ஜின் தேர்வுகள் முறையே 126 பிஎச்பி பவர்/260 என்எம் டார்க் திறன் மற்றும் 121 பிஎச்பி பவர்/151 என்எம் டார்க் திறனை தற்போதைய தலைமுறை வெர்னா காருக்கு வழங்குகின்றன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

இதேபோல் உட்புறத்திலும் இந்த கார் ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றுவரும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய புதிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், (அடுத்த ஸ்லைடை பார்க்க)

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், காரை ஸ்டார்ட் செய்ய மற்றும் நிறுத்த பொத்தான், காற்றோட்டமான முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆடியோ கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் உள்ளிட்டவை இந்த 2020 மாடலில் எதிர்பார்க்கப்படும் அப்டேட்களாக உள்ளன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

வெளிப்புறத்தில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட்ஸ், எலக்ட்ரானிக்கல் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஒஆர்விஎம்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், மற்றும் கூல்-பாக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

பாதுகாப்பு அம்சங்களாக இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் அலாரம், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, முன்புறத்தில் இரு காற்றுப்பைகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் அமைப்பால் சான்றிதழ் பெற்ற குழந்தை இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

தற்போதைய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.8.18 லட்சத்தில் இருந்து ரூ.14.08 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.16 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 மாடலின் என்ஜின் குறித்த விபரங்கள் கசிவு...

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது நாம் அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி துவங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் காரின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளி வந்திருப்பது கண்டிப்பாக ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருக்க வேண்டும்.

Most Read Articles
English summary
Hyundai Verna Facelift BS6 Model To Be Unveiled At Auto Expo
Story first published: Monday, January 27, 2020, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X