ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக, பல்வேறு மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

இந்த புதிய டூஸான் எஸ்யூவி விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதாவது, அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

ஹூண்டாய் டூஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய டிசைன் தாத்பரியங்கள் கையாளப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள் உள்ளிட்டவை மாற்றங்களுடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்படும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த கார் வர இருக்கிறது. இந்த காரில் முக்கிய அம்சமே, பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டாக வர இருக்கும் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலானது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்விலும் கிடைக்கும்.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் ஹைப்ரிட் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால், அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது ஆட்டோ எக்ஸ்போவில்தான் தெரிய வரும்.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றிப்பது போன்றே, உட்புறத்திலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஹூண்டாய் புளூ லிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் இடம்பெற்றிரு்ககும்.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

இந்த காரில் 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஹூண்டாய் டூஸான் பிஎஸ்-6 மாடல் இந்திய அறிமுக விபரம்!

தற்போது ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலானது ரூ.18.77 லட்சம் முதல் 23.74 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடலானதுரூ.20.80 லட்சம் முதல் ரூ.26.97 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. பிஎஸ்-6 எஞ்சினுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வர இருப்பதால் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Via - NDTV Auto

Most Read Articles
English summary
According to report, The Hyundai Tucson facelift will be launched in India at the 2020 Auto Expo.
Story first published: Monday, January 13, 2020, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X