ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃபட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்தியாவின் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் விற்பனையில் டாப் - 3 மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் வெர்னா உள்ளது. இந்த நிலையில், வலுவான வர்த்தகத்தை வைத்திருக்கும் மாருதி சியாஸ் மற்றும் விரைவில் புதிய ஹோண்டா சிட்டி கார் வருகையால் ஹூண்டாய் வெர்னா சந்தைக்கு நெருக்கடி காத்திருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

அத்துடன், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளையும் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்காக, புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட வெர்னா கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

கடந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் நடந்த செங்குடு ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புதிய ஹூண்டாய் வெர்னா கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல்தான் இப்போது இந்தியாவுக்கான விசேஷ அம்சங்களுடன் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த புதிய மாடல் வரும் மார்ச் 26ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கார் புதிய சான்ட்ரோ கார் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு கொள்கையின் கீழ் பல்வேறு மாற்றங்களுடன் வர இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

முகப்பில் மிகப்பெரிய க்ரில் அமைப்பு, பக்கவாட்டிலிருந்து முகப்பு வரை செல்லும் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு ஆகிய கொடுக்கப்பட்டுள்ளன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறும். இதன் அலாய் வீல்கள் கூட மிக வித்தியாசமாக இருக்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை இணைக்கும் விதத்தில், எல்இடி விளக்கு பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் 25 மிமீ கூடுதல் நீளத்துடன் மாற்றம் கண்டுள்ளது. இதனால், இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும். ஹூண்டாய் நிறுவனத்தின் புளுலிங்க் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பமும் உள்ளது. ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை பெற முடியும்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். கியா செல்டோஸ் காரில் பயன்படுத்தப்படும் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளுடன் புதிய வெர்னா கார் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

சீனாவில் விற்பனையில் உள்ள மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 48V மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்டதாக கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் இந்த மாடல் வருவது சந்தேகமாக உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்!

வரும் ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும். மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Team BHP

Most Read Articles
English summary
According to reports, Hyundai will launch Verna Facelift in India on 26 March, 2020.
Story first published: Thursday, February 27, 2020, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X