உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்...

உலகின் முதல் நடக்கும் திறனுடைய மின்சார சக்தி கொண்ட ரோபோட்டிக்ஸ் வாகனத்தை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சியளித்த இந்த வாகனம் பற்றிய சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் வேகாஸ் பகுதியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் மிகவும் வித்தியாசமான வாகனம் ஒன்றை காட்சிப்படுத்தியது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

இது விண்வெளியில் பயன்படக்கூடிய சிறப்பம்சங்களைக் கொண்ட வாகனமாகும். குறிப்பாக இந்த வாகனம் நான்கு கால்களைக் கொண்ட வாகனம் ஆகும். இதுபொருத்தப்பட்டுள்ள சக்கரங்கள் சாலையில் செல்வதற்கும், கால்கள் கரடுமுரடான பாதையில் நடப்பதற்கும் உதவும்.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

விண்வெளியில் இருக்கும் கிரகங்களில் சீரான பாதை இருக்காது என்பதற்காக, எந்தவொரு சூழ்நிலையையும் இந்த வாகனம் சமாளிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய திறன் அந்த வாகனத்திற்கு ஹூண்டாய் வழங்கியுள்ளது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

ஹூண்டாய் இந்த எலிவேட், மின்சார கார் தொழில்நுட்பத்தை ரோபாட்டிக்ஸ் உடன் இணைக்கும் உலகின் முதல் 'அல்டிமேட் மொபிலிட்டி வாகனம்' (யு.எம்.வி) ஆகும்.

முக்கியமாக பேரிடர் காலங்களில் தங்கு தடையின்றி விரைந்து உதவும் நோக்கில் இந்த வாகனத்தை ஹூண்டாய் வடிவமைத்துள்ளது. ஆகவே, இந்த வாகனத்தை விண்வெளி பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துகின்றதோ, இல்லையோ நிச்சயம் ஆபத்து காலங்களில் உதவ பயன்படுத்தும் என்பது இதன்மூலம் தெரியவருகின்றது.

இத்தகைய வாகனத்தை உருவாக்குவது உலகிலேயே ஹூண்டாய் நிறுவனம்தான் முதல்முறையாகும். இதற்கு முன்பாக எந்தவொரு நிறுவனமும் இதுபோன்று கால்கள் கொண்ட வாகனத்தை தயாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வாகனத்தை முதலில் ஆம்புலன்ஸாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

குறிப்பாக, பூகம்பம் மற்றும் சுனாமி போன்ற பேரழிவுகளினால் சாலை போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுகின்றது. விமானங்களும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தரையிறங்கும். எனவே, முழுவதுமாக அழிவைச் சந்தித்த பகுதிகளுக்கு மனிதனால் மட்டுமே உதவியை வழங்கிட முடியும். இதுபோன்ற, உதவி வழங்க செல்லும் மனிதர்களுக்கு எத்தகைய சூழல் வேண்டுமானாலும் நிகழலாம். இதுபோன்ற சூழ்நிலையில் உதவும் வகையில்தான் இந்த ஹூண்டாய் எலிவேட் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

இது, எம்மாதிரியான மோசமான பேரழிவையும் சந்தித்த பகுதிகளில் கூட அசால்டாக நுழைந்துவிடும். அதற்கேற்ப வகையில் மிகச் சிறிய அளவில் இந்த வாகனம் உதவி பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஹூண்டாய் எலிவேட் வாகனம் பள்ளம் மற்றும் பல அடிகள் உயர்ந்த இடத்தில்கூட மிக சுலபமாக ஏறிவிடும் என்பது மிகச் சிறந்த அம்சமாக இருக்கின்றது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

ஆகையால், இந்த வாகனம் அவசர காலங்களில் மிகச்சிறந்த பயனை அளிக்கும் என ஹூண்டாய் உறுதியாக நம்புவதுடன், இந்த கருத்தையும் பரப்பி வருகின்றது.

இந்த வாகனத்தில் மனிதர்கள் அமர்ந்து செல்வதற்கான இடம் மற்றும் தேவையான குறிப்பிட்ட அளவு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், ஆபத்தில் உள்ளவர்களை ஆம்புலன்ஸாக பயன்படுத்த மருத்துவமனைக்கும் இந்த வாகனம்மூலம் எடுத்துச் செல்ல முடியும்.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

இது மின்சார வாகனம் என்பதுடன் தானியங்கி வாகனம் என்பது கூடுதல் சிறப்பு விஷயமாக உள்ளது. ஆகையால், இதன் கால்கள் சென்சாரைப் பயன்படுத்தி தானாக தேவைக்கேற்ப நடக்க அல்லது காரை போல் விரைந்து செல்லும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளும்.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

சக்கரங்கள் பொருந்திய நான்கு கால்கள் தேவைப்படும்போது விரிந்தும், தேவையற்ற நிலைகளில் மடித்துக் கொண்டும் இருக்கும். இது 15 அடி உயரத்தைக்கூட மிக அசால்டாக ஏறிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

முற்றிலும் மாறுப்பட்ட திறன் கொண்ட இந்த ஹூண்டாய் எலிவேட் காரை வடிவமைத்த சுண்ட்பெர்க் பெரின் அதுகுறித்த கூறியதாவது, "ஹூண்டாயின் சமீபத்திய ஈ.வி தொழில்நுட்பத்துடன் ரோபாட்டிக்ஸ் சக்தியை இணைத்திருப்பதன் மூலம், தற்போது எந்தவொரு காரும் செல்ல முடியாத இடங்களுக்கு இந்த எலிவோட் உங்களை அழைத்துச் செல்லும். இதற்கான அனைத்து திறன்களையும் அது கொண்டுள்ளது. இது, தடையின்றி செயல்படும் சுதந்திரமான வாகனம்" என்றார்.

உலகின் முதல் நடக்கும் திறனுடைய ஹூண்டாய் எலிவேட் கார்... 15 அடி உயரத்தைகூட அசால்டாக ஏறிவிடும்... வீடியோ...!

தொடர்ந்து, "ஓர் கற்பனையாக நினைத்து பாருங்கள் ஓர் பத்து அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்திருக்கமேயானால், அதில் உள்ள காயமுற்றவர்களை வெளியேற்ற சாதாரண காரால் உதவ முடியுமா..? ஆனால், இந்த எலிவேட் எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவும். இதுதான் வாகன இயக்கத்தின் எதிர்காலம்" என கருத்து தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Hyundai Elevate Car Concept — A Car Which Can ‘Walk’ Through Rough Terrain..! Read In Tamil.
Story first published: Saturday, February 8, 2020, 18:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X