டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

ஒரு சில டிரைவிங் ஸ்கூல்கள் லைசென்ஸ் பெற என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தி உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

கார் டிரைவிங்கில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகள் கூட சில சமயங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றனர். அஜாக்கிரதையால் நடந்து விடும் இத்தகைய விபத்துக்கள் கடுமையான பின் விளைவுகளை உண்டாக்குகின்றன. அனுபவஸ்தர்களுக்கே இந்த நிலைமை என்றால், புதிதாக கார் ஓட்டி பழகியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் ஆண், பெண் பாகுபாடின்றி இளம் வயதினர் அனைவரும் கார் ஓட்டி பழகுவதில் ஆர்வமாக உள்ளனர். வீட்டில் சொந்தமாக கார் இருப்பவர்கள் அதன் மூலம் பழகி கொள்கின்றனர். இந்த வாய்ப்பு இல்லாதவர்கள் டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் கார் ஓட்டி பழகி கொள்கின்றனர். ஆனால் எங்கு கார் ஓட்ட பழகியிருந்தாலும், புதிதாக ஸ்டியரிங்கை பிடிக்கும் ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் தெரிவதில்லை.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

எனவே அவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளக்கூடிய சூழல் காணப்படுகிறது. எனவே புதிதாக கார் ஓட்ட பழகியவர்களுக்காக இந்த செய்தியை வழங்கியுள்ளோம். சாலை விபத்துக்களில் சிக்கி கொள்ளாமல் கார் ஓட்டுவது எப்படி? என்பது குறித்து இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ள மிக முக்கியமான பாதுகாப்பு டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

நம்பிக்கையான டிரைவர்தான் பாதுகாப்பான டிரைவர்!

எந்தவொரு செயலை புதிதாக செய்தாலும் கொஞ்சம் தயக்கமும், ஒரு விதமான கூச்சமும் இருக்கவே செய்யும். டிரைவிங்கும் கூட அப்படித்தான். புதிதாக கார் ஓட்டி பழகியவர்கள் ஒவ்வொரு முறை காரை எடுக்கும்போதும் ஒரு விதமான பயம் உண்டாகலாம். இந்த பயம் கொஞ்சம் நியாயமானதுதான். ஏனெனில் டிரைவிங் என்பது ஆபத்தான செயல்பாடுகளில் ஒன்று.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

ஆனால் டிரைவிங் மூலம் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. எனவே துணிந்து அந்த ரிஸ்க்கை நாம் எடுக்கிறோம். ஆனால் டிரைவிங்கை பொறுத்தவரை தயக்கம் காட்டுபவர்கள் பாதுகாப்பு இல்லாத டிரைவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் நம்பிக்கையுடன் காரை ஓட்டுங்கள். ஏனெனில் நம்பிக்கையான டிரைவர்தான் பாதுகாப்பான டிரைவர்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

காருடன் ஒன்றி விடுங்கள்!

ஒவ்வொரு காரும் ஒரு வகையில் இருக்கும். எனவே நீங்கள் காரை ஓட்ட தொடங்குவதற்கு முன்பாக அந்த காரின் கண்ட்ரோல்கள் பற்றிய புரிதல் உங்களுக்கு இருப்பது அவசியம். இதில், இருக்கை கண்ட்ரோல்கள், ரேடியோ, ஏசி, விண்டோ, லாக், விண்டுஷீல்டை சுத்தப்படுத்துவது எப்படி? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் அடங்கும்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

நீங்கள் காரை ஓட்ட தொடங்குவதற்கு முன்னதாக அதன் ஓனர்ஸ் மேனுவலை நன்றாக படிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் அதை செய்வது கிடையாது. உண்மையில் அந்த மேனுவல் மூலம் நீங்கள் உங்கள் காரை பற்றி பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் இதனை கடைபிடிக்கலாம்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

உங்கள் காரின் கண்ட்ரோல்களை பற்றிய விஷயங்கள் உங்களுக்கு தெரியாவிட்டால், சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அது எங்கே உள்ளது? இது எங்கே உள்ளது? என தேடிக்கொண்டிருக்க வேண்டியதாகி விடும். இதனால் உங்கள் கவனம் சிதறும் என்பதால், சாலை விபத்துக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை வேண்டாம்!

புதிதாக கார் ஓட்டி பழகியவர்களுக்கு நாம் கார் ஓட்டுவது குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்பது போன்ற ஒரு விதமான தயக்கம் இருக்கும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்பதை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். மிகவும் கவனமாகவும், நம்பிக்கையுடனும் பாதுகாப்பாக ஓட்டினாலே போதும்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

மதமதப்பும் வேண்டாமே!

புதிதாக கார் ஓட்டுபவர்களில் ஒரு சிலருக்கு பயம் இருந்தாலும் கூட, இன்னும் சிலருக்கு ஒரு விதமான மதமதப்பு வந்து விடுகிறது. அதுதான் பழகி விட்டோமே என்ற மதமதப்பில், காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசுவது, மெசேஜ் டைப் செய்வது, ரேடியோவில் சேனலை மாற்றுவது, பின்னால் அமர்ந்திருப்பவர்களுடன் அரட்டை அடித்து கொண்டே வருவது போன்ற சேட்டைகளை சிலர் செய்கின்றனர்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

அனுபவசாலிகள் என்றாலும் சரி அல்லது புதிதாக கார் ஓட்டுபவர்கள் என்றாலும் சரி, இது போன்ற செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானது. அதிலும் புதிதாக கார் ஓட்டுபவர்கள் இதையெல்லாம் நிச்சயமாக செய்யவே கூடாது. உங்கள் கவனம் முழுக்க முழுக்க சாலையின் மீதுதான் இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் நடந்து விடும்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

பார்க்கிங் செய்து பழகுவதும் முக்கியம்!

புதிதாக கார் ஓட்ட பழகுபவர்களில் பெரும்பாலானோர் முறையாக பார்க்கிங் செய்ய பழகி கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் அது கொஞ்சம் கடினம். புதிதாக ஸ்டீயரிங் வீலை பிடிப்பவர்களை அது பயமுறுத்துகிறது. ஆனால் பயந்தால் வேலைக்கு ஆகாது. ஏனெனில் காரை முறையாக பார்க்கிங் செய்வது மிகவும் அவசியமானது.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

எனவே இதனை பழகும்போது உங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுங்கள். முதலில் ஒரு சில முறைகள் தவறுகள் நடக்கலாம்தான். அதனை மறுக்க முடியாது. ஆனால் ஒரு சில முயற்சிகளுக்கு பிறகு இதில் நீங்கள் மாஸ்டர் பட்டம் வாங்கி விடுவீர்கள். எனவே நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள்!

கார் ஓட்ட பழகினால் மட்டும் போதாது. போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். அதுதான் ஒரு நல்ல கார் டிரைவருக்கு அழகு. டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் ஒரு தவறு உங்களை மட்டும் பாதிக்காது. சாலையில் பயணிக்கும் மற்றவர்களையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை மனதில் கொண்டு விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

சீட் பெல்ட் அணிய மறக்க வேண்டாம்!

காரில் ஏறியவுடன் மறவாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் பயணிகளையும் சீட் பெல்ட் அணியும்படி வலியுறுத்துங்கள். இதனை எப்போதும் தவறாமல் பின்பற்றுங்கள். ஏனெனில் சாலை விபத்துக்கள் நேர்ந்தால், உங்களையும், உங்களுடன் பயணிப்பவர்களையும் சீட் பெல்ட் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

அட்ஜெஸ்ட் பண்ணுங்க!

காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்னதாக சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்து கொள்வது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு இருக்கை சௌகரியமான பொஷிஷனில் இருக்கிறதா? என்பதை பார்த்து அட்ஜெஸ்ட் செய்வதும் முக்கியம். அதேபோல் மிரர்கள் அனைத்தையும் சரியாக அட்ஜெஸ்ட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

எதற்கும் தயாராக இருங்கள்!

உங்கள் கார் விபத்தில் சிக்கினாலோ, பிரேக் டவுன் ஆனாலோ அல்லது வேறு ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டாலோ அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருங்கள். அதாவது முக்கியமான டிரைவிங் ஆவணங்கள், எமர்ஜென்ஸி கிட் போன்றவை உங்கள் காரில் இருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு சில பிரச்னைகளை நீங்கள் தவிர்க்கலாம்.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

ஓவர் ஸ்பீடு வேண்டாமே!

இளம் டிரைவர்கள் விபத்தில் சிக்க மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது அதிவேகம்தான். எனவே எக்காரணத்தை கொண்டும் அதிவேகத்தில் செல்லாதீர்கள். எங்கும் செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே கிளம்புங்கள். அதேபோல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதையும் தவிர்த்து விடுங்கள். இளம் வயதினர் விபத்தில் சிக்க இதுவும் முக்கியமான காரணமாக உள்ளது.

டிரைவிங் ஸ்கூல்ல இந்த விஷயங்களை எல்லாம் உங்களுக்கு சொல்லி தரவே மாட்டாங்க... என்னனு தெரியுமா?

ஒரு சில டிரைவிங் ஸ்கூல்களில் இதுபோன்ற மிக முக்கியமான பாதுகாப்பு விஷயங்களை சொல்லி கொடுப்பதில்லை. அதற்கு மாறாக டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டுமே அவர்கள் சொல்லி கொடுக்கின்றனர். எனவே இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம். உங்கள் பயணம் எப்போதும் சிறக்க வாழ்த்துக்கள்!

Most Read Articles
English summary
Important Car Driving Tips For Beginners. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X